முன் விரோத தகராறு இருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன் விரோத தகராறு இருவர் கைது

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகே சொத்து பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் இருவரை போலீசார் கைது செய்தனர்.காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்தவர் குமார் மகள் பரமேஸ்வரி, 21; இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். குமாருக்கும் அவருடைய சித்தப்பா ஜெயசீலனுக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது குறித்து பரமேஸ்வரி கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலனின் 17 மற்றும் 18 வயது மகன்கள் மற்றும் அவரது மனைவி அறிவழகி ஆகிய மூவரும் சேர்ந்து குமார் மற்றும் பரமேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்து பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசசார் வழக்குப் பதிந்து, ஜெயசீலனின் மகன்கள் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X