கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி கேட்டு மிரட்டியவர் கைது

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருக்கோவிலுார்: கந்துவட்டி கேட்டு டீக்கடை ஊழியரை மிரட்டியவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.திருக்கோவிலுார் அடுத்த துரிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் அண்ணாதுரை‚ 32; சென்னையில் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை சுப்ரமணியன் திருப்பாலப்பந்தலை சேர்ந்த பழனிச்சாமி யிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதில் ஒரு லட்சத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்ட நிலையில்‚ கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இறந்துவிட்டார்.அதனைத் தொடர்ந்து பழனிச்சாமி, சுப்ரமணிம கன் அண்ணாதுரையிடம் வீட்டின் ஒரு பகுதியை எழுதி வாங்கிக் கொண்டதோடு, மேலும் பணம் கேட்டு கொடுமைபடுத்தி வீட்டை பூட்டி, மிரட்டி வந்தார். இதனால் அதிருப்தியடைந்த அண்ணாதுரை தனது மனைவி புனிதா‚ மகன் வசீகரன்‚ மகள்கள் ரமாதேவி‚ பிரியதர்ஷிணி ஆகியோருடன் விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 6ம் தேதி தீக்குளிக்க முயன்றனர்.அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், அண்ணாதுரையின் மனைவி புனிதா கொடுத்த புகாரின்பேரில்‚ திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்கு பதிந்து, பழனிச்சாமியை நேற்று முன்தினம் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X