பெண்ணிடம் நகை பறிப்பு சத்தம் போட்டதால் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை பறிப்பு சத்தம் போட்டதால் கொலை

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்: மாடு மேய்த்த பெண்ணை, நகைக்காக, கொலை செய்து விட்டு, தப்பிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் அடுத்த, முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் மனைவி, பார்வதி, 58. கணவர் இறந்து விட்ட நிலையில், மகளுடன் வசித்து வந்தார்.தினமும் மாடுகளை அருகில் உள்ள திருப்புட்குழி ஏரிக்கு மேய்க்க செல்வார். நேற்று முன்தினம், வழக்கம் போல் சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இரவு 7:00 மணியளவில், அவர் மகள், பேரன் மற்றும் உறவினர்கள் சிலர், அந்த ஏரிக்கு அவரை தேடிச் சென்றனர். மாடுகள் மரத்தில் கட்டிய நிலையில் இருந்தன. அவை கத்தும் சத்தம் கேட்டு அங்கு சென்றனர்.அருகில் உள்ள புதரில் பார்வதி இறந்த நிலையில் கிடந்ததை பார்த்தனர். அவர் ஏழு சவரன் செயின் மற்றும் காதணிகள் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. அதைப் பறித்துள்ள மர்ம நபர்கள், அவர் சத்தம் போட்டதால், மாட்டிக் கொள்வோம் என, பயந்து அவரது சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று, உடலை கைப்பற்றி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X