ஏரி நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரி நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

Added : டிச 08, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஏரி நீரில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

செங்கல்பட்டு: ஆலப்பாக்கம் ஏரி நீரில், மூழ்கி இரண்டு மாணவர்கள் இறந்தனர்.செங்கல்பட்டு அடுத்த, திருமணி, பாரதபுரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மகன் இம்ரான் என்கிற சுகில், 15; இவர், தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சத்யா, 12; இவர், தனியார் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று, பிற்பகல், 2:30 மணிக்கு, பள்ளிக்கு விடுமுறை என்பதால், இம்ரான், சத்யா மற்றும் ஆறு நண்பர்களுடன், ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.அப்போது, இம்ரான், சத்யா நீரில் மூழ்கினர். இதை பார்த்த மற்றவர்கள் ஓடிவிட்டனர். அதன் பின், இம்ரான் உடல் நீரில் மிதந்தது.அப்போது, அவ்வழியாக சென்றவர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின், அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், நீரில் மிதந்த இம்ரான் உடலை மீட்டனர். அதன் பின், சத்யா உடலை, தேடும் பணியில், அவர்கள், ஈடுபட்டபோது, பாறைக்கல்லில் சிக்கி இறந்தவரை, மீட்டனர்.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X