வழக்கறிஞர் கொலை வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞர் கொலை வழக்கு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பட்டப்பகலில், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ௧௯ம் தேதி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை துவங்குகிறது.உயர் நீதிமன்றத்தில், முருகன் என்பவர் வழக்கறிஞராக, 'பிராக்டீஸ்' செய்து வந்தார். கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில், மனைவியுடன் வசித்து வந்தார்.கடந்த, ௨௦௧௬ ஜூனில், முருகன் படுகொலை செய்யப்பட்டார். கூலிப்படையை ஏற்பாடு செய்து, கொலை நடந்ததாக, விசாரணையில் தெரியவந்தது.கொலை வழக்கில், முருகனின் மனைவி லோகேஷினி, சண்முகநாதன் உள்ளிட்ட ஆறுபேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட வர்களுக்கு எதிராக, குண்டர் சட்டம் பாய்ந்தது. இவ்வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, நகல்கள் வழங்கப்பட்டன.இவ்வழக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது.வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகினர்.லோகேஷினி தரப்பில், வழக்கறிஞர், துரைப்பாண்டியன் ஆஜரானார். போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் ஆஜரானார். விசாரணை, வரும், ௧௯ம் தேதி துவங்குவதாக,நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X