நிட்டிங் துறையினர் மீது 'சைமா' ஆதங்கம்! பிரச்னைக்கு தீர்வு காண உறுதி| Dinamalar

தமிழ்நாடு

நிட்டிங் துறையினர் மீது 'சைமா' ஆதங்கம்! பிரச்னைக்கு தீர்வு காண உறுதி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நிட்டிங் துறையினர் மீது 'சைமா'  ஆதங்கம்! பிரச்னைக்கு தீர்வு காண உறுதி

திருப்பூர்:'எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், நிட்டிங் துறையினர், உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்திவிட்டனர்' என, தொழில் அமைப்பு பிரதிநிதிகள் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.
உற்பத்தி செலவு அதிகரிப்பால், திருப்பூர் 'நிட்மா' மற்றும் 'சிம்கா' சங்கங்கள், கடந்த மே மாதம், நிட்டிங் கட்டணத்தை, 20 - 25 சதவீதம் உயர்த்தின. ஏழு மாதமாகியும், பெரும்பாலான ஏற்றுமதி, உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்ட கட்டண நிலுவை வழங்கவில்லை.'உடனடியாக கட்டண உயர்வு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கை வலியுறுத்தி, கடந்த, 5, 6ம் தேதிகளில், நிட்டிங் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தின. பேச்சுக்கு, சைமா சங்கம் அழைப்பு விடுத்ததையடுத்து, நிட்டிங் சங்கங்கள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை கைவிட்டன.முதற்கட்ட பேச்சு வார்த்தைக்கு, 'சைமா' தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன், பொருளாளர் ராமசாமி; ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், டீமா தலைவர் முத்துரத்தினம் பங்கேற்று, ஆலோசனை நடத்தினர். அவர்கள் கூறியதாவது;நிட்டிங் துறையினர், கட்டண உயர்வு கிடைக்காததால், போராட்டம் நடத்துவதாக, எந்தவொரு ஆடை உற்பத்தி சங்கத்துக்கும் முறையான அறிவிப்பு வழங்கவில்லை.
முன்னறிவிப்பின்றி, இரண்டு நாட்கள், உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்திவிட்டனர். தொழிற்சங்கங்கள் கூட போராட்டத்தில் ஈடுபடாத நிலையில், தொழில் முனைவோர், நேரடியாக போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என, சங்க பிரதிநிதிகள் தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டனர்.
எதிர்காலத்தில், இதுபோன்று, தொழிலை பாதிக்கும் வகையிலான, தன்னிச்சையான முடிவெடுக்கக் கூடாது; அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசித்த பிறகே, முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளியூர் சென்றுள்ள நிட்மா சங்க தலைவர், திருப்பூர் திரும்பியபின், நிட்மா மற்றும் சிம்கா சங்க பிரதிநிதிகளை அழைத்து, கட்டண உயர்வு குறித்து பேச்சு நடத்தி, சுமூக தீர்வு காண்பது என, முடிவெடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X