காவிரி ஆணையத்துக்கு முழுநேர தலைவர் நியமிக்க வழக்கு:  சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வழக்கு!
காவிரிஆணையத்துக்கு முழுநேர தலைவர்?
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்

பதுடில்லி:காவிரி மேலாண்மை ஆணையத் துக்கு, சுதந்திரமான, முழு நேர தலைவரை நியமிக்கும்படி, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 'ஆணையத் துக்கு, நிரந்தர உறுப்பினர்களை நியமிக்கும்படி, மத்திய நீர்வளத் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என, அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

வழக்கு, காவிரி ஆணையம், முழுநேர தலைவர், சுப்ரீம் கோர்ட், தமிழக அரசு, மனு தாக்கல்

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக, புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம், பிப்ரவரியில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்த மத்திய அரசு, புதிய வரைவு செயல் திட்டத்தை, உச்ச நீதிமன்றத் தில் தாக்கல் செய்தது.இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் இடைக்கால தலைவராக, மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே, மத்திய நீர்வள ஆணைய தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற இடத்தில், 5,912 கோடி ரூபாய் செலவில், அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்தது.

இதற்கு விரிவான வரை படம் மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு, மத்திய நீர்வள ஆணையம், சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. மேலும், சாத்தியக்கூறு அறிக்கை தாக்கல் செய்யும் படியும் தெரிவித்தது. இதற்கு ,தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.தமிழக சிறப்பு சட்டசபை கூட்டம்,

சமீபத்தில் நடந்தது. அதில், மேகதாது அணை கட்ட கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அதற்கு, மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி, ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அந்த கூட்டத்தில், 'காவிரி மேலாண்மை ஆணையத் துக்கு, நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால தலைவரை நீக்கிவிட்டு,நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில், 'காவிரி மேலாண்மை ஆணையத் துக்கு, சுதந்திரமான முழு நேர தலைவரை நியமிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு, நேற்று மனு தாக்கல் செய்தது. அதன் விபரம்: மேகதாது அணை கட்டு வது தொடர்பாக, திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு, மத்திய நீர் வள ஆணையம், ஒப்புதல் வழங்கி உள்ளது.

இந்த நீர்வள ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வரும், மசூத் ஹுசைன், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் இடைக்கால தலைவராக பதவி வகித்து வருகிறார்.ஒரே நபர், இரு அமைப்புகளுக்கு தலைவராக பதவி வகிப்பது, இது போன்ற நேரங்களில், பல சிக்கல்களுக்கு வழி வகுக்கும். அவருக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி களின் பணிகளிலும், பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும்.

நீதிமன்ற உத்தரவுகளை, சரிவர நிறைவேற்று வதில், சிக்கல்களைஏற்படுத்த கூடும்.மேகதாது அணை தொடர்பாக, மத்திய நீர்வள ஆணையத் திடம், ஏற்கனவே, தமிழக அரசின் எதிர்ப்பை வெளிப் படுத்தி உள்ளோம். அப்படியிருந்தும், இந்த திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப் பட்டிருக்கிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதன் நோக்கம் முழுமையாகநிறை வேறவும், அதன் பணிகள் நேர்மையாக நடக்கவும்,

Advertisement

ஆணையத்திற்கு, சுதந்திரமான, முழுநேர தலைவர் நியமிக்கப்பட வேண்டும். மேலும், காவிரி மேலாண்மை ஆணையத் துக்கு, நிரந்தர உறுப்பினர்களை நியமிக்க, மத்திய நீர்வளத் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

'தன்னிச்சையாக செயல்பட முடியும்'



இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தேசிய தலைவர், விருத்தகிரி வெளியிட்ட அறிக்கை விபரம்:காவிரி நீர் ஆணையம், தன்னிச்சையாக செயல்பட வேண்டுமானால், அரசு தொடர் பில்லாத, தனி தலைவர், நிரந்தரமாக தேவை. அப்போதுதான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய, காவிரி நீரை பெற முடியும்.

தற்போது, மத்திய நீர்வள ஆணையர், மசூத் ஹுசைன், காவிரி மேலாண்மை ஆணைய இடைக்காலத் தலைவராக உள்ளார். அவர் மத்திய நீர்வள ஆணையராகவும் இருப்பதால், அவரால் தன்னிச்சையாக செயல்பட முடிய வில்லை. மத்திய அரசு கூறுவது போல் செயல்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே, நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
09-டிச-201820:28:01 IST Report Abuse

Girijaஎன்ன ஒரு மட்டமான நிர்வாகம் மற்றும் அரசியல் ? நீர் நிலை தலைவர் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி தானா ? அல்லது அரசியல்வாதியா? கொழுந்துவிட்டு எரியும் காவேரி நீர் பிரச்சனை இருக்கும்போது அவரே இரண்டு துறைகளுக்கும் தலைவராக இருந்துகொண்டு பொது அமைதியை கெடுக்கும் விதமாக இப்படி ஒரு உத்திரவு போட்டிருக்கிறார் சரி இது ஒரு ஆய்வுக்காக தான் என்று அவர் கூட இன்னும் சொல்லவில்லை பாஜக சொல்லிக்கொண்டிருக்கிறது. இதை அவரே சொல்லியிருக்கலாம் அல்லது அறிவிப்பு வெளியிட மத்திய அரசு கூறியிருக்கலாம் அல்லது காவேரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் பிற மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் என்று சுப்ரீம் கோர்ட் கூறி இருக்கலாம். இந்த விவகாரம் எப்படி இருக்கு என்றால், எட்டாம் வகுப்பு பெயில் ஆன மாணவன், தான் எட்டாம் வகுப்பு பெயில் என்ற உண்மையையே விண்ணப்பதில் பதிந்து, ஐ ஏ எஸ் பரிட்சைக்கு விண்ணப்பித்து தேர்வில் வெற்றியும் பெற்று பணி உத்திரவு பிறப்பிக்கும் போது கல்வி தகுதி சான்றிதழை பரிசீலிக்கும் போது தான் கவனித்தோம் அதனால் பணி வழங்கமுடியாது என்று சொல்லுவது போல் உள்ளது.

Rate this:
09-டிச-201816:04:59 IST Report Abuse

kulandhaiKannanஒரு சிறுபான்மை இனத்தவரை எப்படி மாற்றக்கோரலாம் என்று திமுக வகையறாக்கள் போராடுவார்களா??

Rate this:
அன்பு - தஞ்சை,இந்தியா
09-டிச-201808:02:28 IST Report Abuse

அன்புமோடி அடுத்தமுறை ஜெயித்து வந்தால், காவேரி ஆணையம் என்ற அமைப்பு, கர்நாடகாவிற்கு தண்ணீர் கொடுத்தபிறகு, எவ்வளவு மிஞ்சுகிறதோ, அது தான் தமிழகத்திற்கு என்று சுப்ரிம் கோர்ட் தீர்ப்பை மாற்றி எழுதிவிடுவார்கள். தமிழக பிஜேபி காரர்களும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால், கடலுக்கு தான் போய் சேரும். அதனால் கர்நாடகா வைத்துக்கொள்வது தான் நல்லது என்று அலறுவார்கள். கட்சிக்கும் ஜாதிக்கும் ரொம்ப விசுவாசமானவர்கள். எந்த பூமியில் வாழ்கிறார்களோ, அந்த பூமிக்கு தான் அவர்கள் எதிரிகள். தமிழக பிஜேபி கார்களுக்கு தமிழகம் தியாகம் செய்வது மட்டும் தான் பிடிக்கும். ஆனாலும் தமிழகத்தை விட்டு நகராமல், இங்கே கிடைக்கும் வேலை வாய்ப்புகள், , கல்வி வாய்ப்புகள் போன்றவற்றை மட்டும் பயன்படுத்துவார்கள். ஆனால் முடிந்தவரை, தமிழகத்தின் சுற்றுசூழல்களை பாதுகாக்க மீத்தேன், ஸ்டெர்லைட் வேண்டும் என்று கதறுவார்கள். தமிழகத்தின் மருத்துவக்கல்லூரியில் பிஹார் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று சமநிலை பேசுவார்கள். ஆனால் பிஹாரில் வாழ மட்டும் போகமாட்டார்கள். ஏனனில் இங்கே உள்ள கல்விவசதிகளும், வேலைவாய்ப்புகளும், பாதுகாப்பும் அங்கே கிடைக்காதே. அமெரிக்காவில் உள்ள ஒரு மெக்கானிக் தமிழகத்தின் டாக்டரை விட அதிகம் சம்பாரிப்பார். தமிழகத்தில் உள்ள ஒரு சித்தாள், பிஹாரில் உள்ள ஒரு எலெக்ட்ரிஷியனை விட அதிக சம்பாரிப்பார். எந்த சமூகம் வளர்ந்துள்ளதோ, அங்கே தான் வளர்ச்சி கிடைக்கும். உங்களின் வளர்ச்சி நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளி என்பதில் அல்ல. எந்த சமூகத்துடன் நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களின் வளர்ச்சி உள்ளது. உண்ட இடத்திற்கு ரெண்டகம் பண்ணுவது துரோகம்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X