மீனவர்களின் மறுவாழ்வுக்கான திட்டம் மத்திய - மாநில அரசு பதிலளிக்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களின் மறுவாழ்வுக்கான திட்டம் மத்திய - மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை, :இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான, மீனவர்கள் குடும்பத்தினரின் மறுவாழ்வுக்கு, திட்டம் வகுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மீனவர் நல சங்கத்தின் தலைவர், பீட்டர் ராயன் தாக்கல் செய்த மனு:இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு, தமிழக மீனவர்கள் பலியாகி உள்ளனர். ௧௯௮௩ முதல், ௨௦௧௩ம் ஆண்டு வரை, ௧௧௧ மீனவர்கள் இறந்துள்ளனர்; ௧௬ பேரை காணவில்லை; ௪௩௯ மீனவர்கள் படுகாயம் அடைந்துஉள்ளனர். ரூ.200 கோடிபடுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கும், காயம்அடைந்த மீனவர்களுக்கும், மறுவாழ்வு திட்டத்தை ஏற்படுத்த கோரினேன்.இது குறித்து, மத்திய, மாநில அரசுக்கு, மனு அனுப்பி உள்ளேன். இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட, தமிழக மீனவர்களின் மறுவாழ்வுக்கு, ௨௦௦ கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசுக்கு வழங்கி உள்ளதாக, மத்திய அரசு பதில் அளித்துள்ளது.இந்த, ௨௦௦ கோடி ரூபாயில், மறுவாழ்வு திட்டத்தை ஏற்படுத்தும்படி, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினேன். மத்திய அரசுக்கும், மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை.
எனவே, மறுவாழ்வு திட்டத்தை ஏற்படுத்த, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.தள்ளிவைப்புநீதிபதிகள், சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் மதனகோபால், மாநில அரசு சார்பில், கூடுதல் அரசு பிளீடர், உதயகுமார் ஆகியோர், 'நோட்டீஸ்' பெற்றனர். பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, ௨௦௧௯ ஜன., ௧௦க்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X