டிசம்பர், 12ல் ரஜினி பிறந்த நாள் ஜெ., ஸ்டைலில் கொண்டாட திட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
டிசம்பர், 12ல் ரஜினி பிறந்த நாள்
ஜெ., ஸ்டைலில் கொண்டாட திட்டம்

ரஜினியின், 68வது பிறந்த நாளை, அவரது மன்ற நிர்வாகிகள், திராவிட கட்சிகள் பாணியில், ஏழைகளுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட உள்ளனர்.

 டிசம்பர், 12ல் ரஜினி பிறந்த நாள்  ஜெ., ஸ்டைலில் கொண்டாட திட்டம்

வரும், 12ல், ரஜினி பிறந்த நாளை, தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களிலும் கொண்டாடு கின்றனர். இந்த ஆண்டு, இந்தியா மட்டுமல்லா மல், ஜப்பானிலும், அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

ரஜினி மக்கள் மன்றத்தில், திராவிட கட்சிகளின் பாணியில், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய செயலர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், கடலுார் மாவட்டம் பிரிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகளை, ரஜினி நியமித்துள்ளார்.

தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்ற இணை செயலராக பணியாற்றிய, வழக்கறிஞர் சினோரா அசோக்கிற்கு, பதவி உயர்வு வழங்கும்வகையில், அம்மாவட்டத்தை இரண்டாக பிரித்து, சென்னை கிழக்கு மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தென்சென்னையை தவிர, மேலும் சில மாவட்டங் களை பிரித்து, புதிய நிர்வாகிகளை நியமிக்க, ரஜினி ஆலோசனை நடத்தியுள்ளார். தன் பிறந்த நாள் அன்று, ரசிகர்களை சந்திப்பதை, ரஜினி தவிர்த்து வந்தார். ஆனால், இந்த பிறந்த நாளில், ரசிகர்களை சந்திப்பார் என, மன்றத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் கூறியதாவது:ரஜினி, திரையுலகில் கொடி கட்டி பறந்த நேரத்தில், தன் பிறந்த நாள் கொண்டாட் டத்தை, தவிர்த்து வந்தார்.காரணம், 22 ஆண்டுகளுக்கு முன், பிறந்த நாள் கொண்டாடிய போது, அவரது ரசிகர்கள் மூன்று பேர், விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.


எனவே, 'பொதுநிகழ்ச்சியாக, தன் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டாம்' என,

Advertisement

ரசிகர்களுக்கு, ரஜினி உத்தரவிட்டு இருந்தார். தன் பிறந்த நாள் அன்று, சென்னையில் தங் காமல், வெளியூருக்கு செல்வதை வாடிக்கை யாக்கினார். தற்போது, அரசியல் ஆர்வத்தில் உள்ள ரஜினி, தமிழகம் முழுவதும், திராவிட கட்சிகள் பாணியில், மக்கள் மன்றத் திற்கு, பூத் கமிட்டி நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, வட்ட நிர்வாகி களை நியமித்து உள்ளார்.

எனவே, ஜெயலலிதா, கருணாநிதி பிறந்த நாள் விழாவை போல், ரஜினிக்கும் போஸ்டர் ஒட்டி, இனிப்பு மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கி, அவரது மற்ற நிர்வாகிகள் கொண்டாட உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
09-டிச-201821:39:08 IST Report Abuse

oceரஜினி கட்சி பெயர் காய்ந்தவர்களுக்கு கை கொடுக்கும் கட்சி. கொடி காவி நிறத்தில் சாமியார். கொள்கை சொல்வதை தேர்தல் நேரத்தில் செய்வோம். சொல்லாததை உடனே செய்வோம். ரசிகர்கள் வணக்கத்திற்கு பதிலாக கை விரல்களை காட்டவேண்டும்.

Rate this:
oce - chennai,இந்தியா
09-டிச-201821:24:05 IST Report Abuse

oceஎம்ஜிஆர் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னார். அதே போல் ஆரம்பித்து ஆட்சி செய்தார். ரஜினி ஆரம்பிப்பதாக சொல்லி சொல்லியே அவரது ரசிகர்களை நோகடிப்பார். ஐயோ பாவம் ரஜினி ரசிகர்கள்.

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
09-டிச-201818:41:26 IST Report Abuse

Rajathirajaதான் பிறந்தநாளில் அரசியல் கட்சி அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன் என்தரும் கட்சி கோடியை வெளியுவேன் என்றும் கூறினார், ஓ எத்தனாவது பிறந்தநாள் என்று சொல்லவில்லையோஅதை வைத்து தப்பித்துக்கொள்ளலாம் இந்த வருடம். கிழ ரசிகர்கள் தான் பாவம்

Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X