கட்சி அலுவலகத்தில் மீண்டும் விஜயகாந்த்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சி அலுவலகத்தில் மீண்டும் விஜயகாந்த்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 கட்சி அலுவலகத்தில் மீண்டும் விஜயகாந்த்

கட்சியினர் விருப்பத்தை, பிரேமலதா செயல்படுத்தியதால், தே.மு.தி.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், 2016 முதல், உடல் நல பிரச்னையால், அவதிப்பட்டு வருகிறார். சிங்கப்பூர், அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 'இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக, தீபாவளி பண்டிகைக்கு பின், விஜயகாந்த், மீண்டும் அமெரிக்கா செல்வார். பழைய கம்பீரத்துடன், அவர் திரும்புவார்' என, மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோர் கூறி வந்தனர்.ஆனால், விஜயகாந்த், அமெரிக்கா செல்வது, சில காரணங்களால், தாமதமாகி வருகிறது. இதற்கிடையில், சென்னையில் இருக்கும் நாட்களில், கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு, காலை, 11:00 மணிக்கு ஆஜராவது, விஜயகாந்தின் வழக்கம். கட்சியின் நடவடிக்கைகள் மட்டுமின்றி, அன்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்களுடன், அவர் பேசுவார்.அதன்பின், மதிய உணவுக்காக, பிற்பகல், 2:30 மணிக்கு தான் வீட்டிற்கு செல்வார். உடல்நல பாதிப்பால், அவதியடைந்து வருவதால், அவரால் கட்சி அலுவலகத்திற்கு, வர முடியவில்லை. வீட்டில், ஓய்வெடுத்து வருகிறார்.கட்சியின் நிர்வாகிகள், பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விசேஷங்களை ஒட்டி, அவரிடம் வாழ்த்து பெற முயற்சித்தனர்; அனுமதி கிடைக்கவில்லை.
இதனால், கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தொண்டர்களும் கடும் விரக்தி அடைந்தனர்.'விஜயகாந்த், கட்சி அலுவலகத்திற்கு வந்து சென்றால், பழைய உற்சாகத்துக்கு திரும்புவார்' என, அவரது நண்பர்களும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும், பிரேமலதாவிடம் கூறினர். தொண்டர்களின் எதிர்பார்ப்பும், அதுவாக இருப்பதாகவும் கூறினர்.இதையடுத்து, மீண்டும் கட்சி அலுவலகத்திற்கு, விஜயகாந்த் வரத் துவங்கியுள்ளார்.
சமீபத்தில், கட்சி அலுவலகம் வந்த விஜயகாந்த், புதிதாக நியமிக்கப்பட்ட, பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து, புகைப்படம் எடுத்தார்.அதற்கடுத்த நாள், கட்சி அலுவலகத்திற்கு வந்து, மாற்று திறனாளிகள் விழாவில் பங்கேற்றார். கட்சி அலுவலகத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடவும், ஏற்பாடு நடக்கிறது. இதிலும், விஜயகாந்த் பங்கேற்பது உறுதியாகி யுள்ளது. தங்களது கோரிக்கைகளை, பிரேமலதா நிறைவேற்றியதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். - நமது நிருபர் -க

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
09-டிச-201819:33:02 IST Report Abuse
Girija 2019 பாராளுமன்ற தேர்தல் தீய சக்தி கட்சிகளை ஒழிக்க தேமுதிக பாஜக ரஜனி அதிமுக கூட்டணி அவசியம் . தீய சக்தி சாப்டர் க்ளோஸ்
Rate this:
Share this comment
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
09-டிச-201813:11:25 IST Report Abuse
S.Ganesan திரு. விஜயகாந்த் பரிபூரண நலம் அடைந்து மீண்டும் சிறந்த முறையில் அரசியலில் ஈடுபட பிரார்த்திக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Subramanian - chennai,இந்தியா
09-டிச-201810:48:09 IST Report Abuse
Subramanian அந்த நல்ல மனிதருக்கு வாழ்த்துக்கள் . ஏழை மக்கள் துயர் துடைக்க அவர் நலம் பெறுவது அவசியம்.
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
09-டிச-201812:39:58 IST Report Abuse
சுந்தரம் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து ஏழைகள் துயரை எப்படி எல்லாம் துடைத்தார் இவர்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X