சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த எழும்பூர் கோர்ட் உத்தரவு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த
எழும்பூர் கோர்ட் உத்தரவு

சென்னை, : 'அன்னிய செலாவணிமோசடி வழக்கில், சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய, 13ம் தேதி, அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்' என, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சசிகலாவை, நேரில், ஆஜர்படுத்த ,எழும்பூர் கோர்ட் ,உத்தரவு

ஜெ.ஜெ., 'டிவி'க்கு, வெளிநாட்டில் இருந்து, எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியதில், சசிகலா, பாஸ்கரன் ஆகியோர், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கில், 2017 ஜூலையில்,

பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


அதேபோல, பெங்களூரு சிறையில்அடைக்கப் பட்டு உள்ள, சசிகலாவை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயி லாக ஆஜர்படுத்தி, குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.குற்றசாட்டு பதிவுக்கு பின், அந்த ஆவணத்தில் கையெழுத்திடுவது போன்ற சில நடைமுறைகள் பின்பற்றப்பட வில்லை.

எனவே சசிகலாவுக்கு எதிராக மறு குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக, நவ., 30ல், அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட், மலர்மதி உத்தரவிட்டிருந்தார்.

அன்றைய தினம், சசிகலா ஆஜராகாததால், வழக்கு விசாரணை நேற்று முன்தினத்திற்கு ஒத்தி வைக்கப் பட்டது. நேற்று முன்தினம் விசாரணையின் போது, பாஸ்கரன் மட்டும் ஆஜரானார். 'சசிகலாவுக்கு

Advertisement

உடல் நிலை சரியில்லாததால், அவரை நேரில் ஆஜர்படுத்த இயலவில்லை' என, பெங்களூரு சிறை நிர்வாகம் தரப்பில், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கை, 13ம் தேதிக்கு தள்ளி வைத்த மாஜிஸ்திரேட், அன்று சசிகலாவை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என, உத்தரவிட்டார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
09-டிச-201820:52:09 IST Report Abuse

oceகோர்ட் உத்திரவு கிடைக்கும் வரை ஜேஜே டிவி முதல் சசிகலா தரப்பில் உள்ள டிவி சேனல்கள் அத்தனையும் மூடி விடவேண்டும்.

Rate this:
oce - chennai,இந்தியா
09-டிச-201820:47:19 IST Report Abuse

oceஅதென்ன கோர்ட்டுக்கு வரச்சொன்னால் உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது. குதிரை கொள் என்றால் வாயை திறக்கும். கடிவாளம் என்றால் வாயை மூடிக்கொள்ளும்.

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
09-டிச-201818:17:33 IST Report Abuse

C.Elumalaiசதிகலா விற்கு நற்பெயரா?சேகர் அவர்களே?.32வருடங்களுக்குமுன் சைக்கிளில்,சென்றவனும்,ரிக்ஷாவில் பிரயாணம்,செய்தவளும்,வீடியோ கடை நடத்தியவளுக்கும்,பல்லாயிரக் கோடி கணக்கான,சொத்துகள்உழைத்து சம்பாதித்ததா?.அம்மாஜி முகமுடி அணிந்து கொள்ளை,அடித்தசொத்துகள், அல்லவா?.சிறையில்தள்ளிய,வழக்கு கூட காங்+திமுக,ஆட்சியில் போடபட்டது, அதேபோன்றுஇவ்வழக்கும்,டோக்கன் மீதும் பொரா,வழக்கும் காங் காலத்தில், போடபட்டவழக்கு,வாய்தா வாங்கி இத்தனை ஆண்டுகாலம் இழுத்தடிக்கபட்டது.இதில்மோடி அரசு எங்கிருந்து வந்தது?.திருட்டு தனம் எல்லாம் செய்யவேண்டியது, வழக்குப்போட்டால்,குய்யோமுறையோ, என மோடியைபார்த்து கத்தவேண்டியது. இதேவழக்கமா போச்சு மன்னார்குடி மாபியா ஆதரவாளர்களுக்கு.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X