நடைபாதையில் கொடி கம்பம்: ஐகோர்ட் அறிவுறுத்தல் | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நடைபாதையில் கொடி கம்பம்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை, 'சாலை ஓரம், நடைபாதையில், கொடி கம்பங்கள் நிறுவப்படாமல் இருப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.சேலத்தைச் சேர்ந்த, ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள கொடி கம்பங்களை, அரசியல் கட்சிகள் அகற்ற வேண்டும் என, தேர்தல் கமிஷன் வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களையும், விளம்பர போர்டுகளையும் அகற்றும்படி, போலீசுக்கும், வருவாய் அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.சாலை ஓரங்கள், பூங்காங்கள், விளையாட்டு மைதானங்கள் என பொது இடங்களை, பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆக்கிரமித்து, கொடி கம்பங்களை நட்டுள்ளன.இதனால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.கொடி கம்பங்களால், அரசியல் கட்சிகளுக்கு இடையே மோதலும் ஏற்படுகிறது. பொதுக் கூட்டங்கள், மாநாடுக்கு, கொடி கம்பங்களை அமைக்க, இயந்திரத்தின் உதவியுடன், நிலத்தில் துளையிடுகின்றனர். இதனால், பூமிக்கு அடியில் உள்ள மின்சார, தொலைபேசி ஒயர்கள் சேதமடைகின்றன.இது பற்றி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், எந்த பலனும் இல்லை. எனவே, பொது இடங்களில் நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ, கொடி கம்பங்களை நிறுவ, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு:அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும், அனுமதி மற்றும் உரிமம் பெறாமல், கொடி கம்பங்களை நடுவதற்கு, சட்டத்தில் தடை உள்ளது. இந்த சட்டப் பிரிவுகள், உரிய முறையில் அமலாகவில்லை. சட்டவிரோத செயல்களை, கண்டும் காணாமல், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளனர். இதற்கு காரணம், அவர்களுக்கு தான் தெரியும்.பாதசாரிகளுக்கும், பொது மக்களுக்கும், இவை அச்சுறுத்தலாக உள்ளன. கொடி கம்பங்களோ, அதை நிறுவுவதற்கான கட்டுமானங்களோ, கீழே சரிந்து விழுந்தால், பாதிக்கப்படுபவர்களுக்கு, அரசு தான் இழப்பீடு அளிக்க வேண்டியது வரும். விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு, எந்த பொறுப்பும் இல்லை. எனவே, முறையான அனுமதி இல்லாமல், சாலை ஓரங்கள், நடைபாதைகள், வளைவுகளில், கொடி கம்பங்கள் நிறுவப்படாமல் இருப்பதை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.மனுவுக்கு, அரசு தரப்பு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை, ௨௦௧௯ ஜன., ௯ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இந்த உத்தரவின் நகலை, உள்ளாட்சி நிர்வாக இயக்குனர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் டி.ஜி.பி.,க்கு அனுப்பும்படி, உயர் நீதிமன்ற பதிவுத் துறைக்கும், நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
09-டிச-201820:17:42 IST Report Abuse
samuelmuthiahraj காஞ்சிபுரத்தில் சாலைகளை ஆக்கிரமித்து பொது இடத்தினை ஆக்கிரமித்து ஒரு முன்னாள் எம் எல் ஏ சிமெண்ட் கம்பங்களை காஞ்சிபுரம் மகேந்திரபல்லவன் தெரு மற்றும் கே டி எஸ் மணி தெருவில் நிறுவி சாலையின் அகலமதை குறைத்து அருகாமையில் உள்ள பொது இடத்தினையும் ஆக்கிரமித்துள்ள செயலினை அதிகாரிகள் நல்ல லஞ்சம் பெற்றுக்கொண்டு அமோக ஆதரவு தெரிவித்து வருவதை ஊடகங்களும் பத்திரிக்கைகளும் கண்டு கொள்ளுவதில்லை இந்த தீர்ப்பினை வழங்கிய நீதிபதி அவர்கள் காஞ்சிபுரம் அதிகாரிகளுக்கு பதவி நீக்கம் மற்றும் அபராதம் விதிக்க வழிவகை செய்யவேண்டுமென பொதுமக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X