இரட்டை இழப்பீடு எஸ்.பி.,க்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இரட்டை இழப்பீடு எஸ்.பி.,க்கு உத்தரவு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை
நாமக்கல் மாவட்டம், கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர், மாரிமுத்து; இவரது மகன், சரவணன்; லாரி டிரைவராக இருந்தார். டயரை மாற்றும் போது, பின்னால் வந்த லாரி மோதியதில் பலியானார். சம்பவம், ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டத்தில், 2014 ஜூனில் நடந்தது.இழப்பீடு கோரி, பவானியில் உள்ள நீதிமன்றத்திலும், குன்னுாரில் உள்ள தொழிலாளர் இழப்பீடு ஆணையரிடமும், மாரிமுத்து முறையிட்டார்.இழப்பீடாக, ௮.௨௦ லட்சம் ரூபாய் வழங்க, பவானி நீதிமன்றமும், 8.50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தொழிலாளர் இழப்பீடு ஆணையரும், தனித்தனியே உத்தரவிட்டனர்.இரட்டை இழப்பீடு பெற்றதால், தொழிலாளர் இழப்பீடு ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம், மனு தாக்கல் செய்தது. காப்பீட்டு நிறுவனம் சார்பில், வழக்கறிஞர், ஜெ.சந்திரன், ''ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதி, எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:ஒன்றை மறைத்து ஒன்று என, இரண்டு வகையாக இழப்பீடு கோரப்பட்டுள்ளது. இது குறித்து, விசாரிக்க, டி.எஸ்.பி., ஒருவரை, ஈரோடு எஸ்.பி., நியமிக்க வேண்டும்.இரண்டு வழக்குகளையும், டி.எஸ்.பி., விசாரித்து, வரும், ௧௭ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இழப்பீடு கோரிய பெற்றோரையும், ஆஜர்படுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X