ஆதி திராவிட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆதி திராவிட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை, : 'ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான, கல்வி உதவித் தொகை வழங்க, இரண்டு மாதங்களில், மத்திய அரசு, 985 கோடி ரூபாயை தர வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் அசோக்குமார் தாக்கல் செய்த மனு:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தனியார் கல்லுாரிகளில், உயர் கல்வி படிக்க ஏதுவாக, மத்திய அரசு திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது, இந்த நிதி வழங்கப்படாததால், அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசு, 1546 கோடி ரூபாயை ஒதுக்கவில்லை என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.இதற்காக, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளது. ஆதி திராவிட மாணவர்களுக்கு, ௨௦௧௨ முதல், ௧,௭௬௫ கோடி ரூபாய், பழங்குடியின மாணவர்களுக்கு, ௩௧.௨௦ கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நிதி ஒதுக்கவில்லை. எனவே, உயர் கல்விக்காக, இந்த தொகையை வழங்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, கல்வி உதவித்தொகை பாக்கி, 82௨. 91 கோடி ரூபாயை, ௨௦௧௬ - ௧௭ம் ஆண்டு வரை, மத்திய அரசு ஒதுக்கவில்லை. இந்த வழக்கில், மத்திய நிதித்துறை சேர்க்கப்படவில்லை என்றாலும், அரசு திட்டத்தின்படி, நிதி ஒதுக்கீடு முறையாக இருக்க வேண்டும்.எனவே, இரண்டு மாதங்களுக்குள், பாக்கி தொகை, 822.91 கோடி மற்றும், 2017 -18 ம் ஆண்டுக்கான தொகையாக, 182 கோடி ரூபாயை, மத்திய சமூக நீதித்துறை வழங்க உத்தரவிடப்படுகிறது. அதன்பின், ௧௬௨ கோடி ரூபாயை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் உயர் கல்விக்காக, தமிழக அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X