'லோக் அதாலத்'தில் ரூ.283 கோடிக்கு தீர்வு Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'லோக் அதாலத்'தில் ரூ.283 கோடிக்கு தீர்வு

சென்னை :தமிழகம் முழுவதும் நடந்த, மக்கள் நீதிமன்றம் என்ற, 'லோக் அதாலத்'தில், ௮௬ ஆயிரம் வழக்குகளில், 283கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

 'லோக் ,அதாலத்'தில்  ரூ.283 கோடிக்கு, தீர்வு

காசோலை மோசடி, நிலம் கையகப்படுத்துதல், குடும்ப பிரச்னை தொடர்பான வழக்குகள், லோக் அதாலத்தில் விசாரணைக்கு

எடுக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில், 10அமர்வு, மதுரை கிளையில், ஆறு அமர்வு, மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் என, மொத்தம், 468அமர்வுகள்ஏற்படுத்தப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள், எஸ்.வைத்தியநாதன், டி.கிருஷ்ணகுமார், எம்.கோவிந்தராஜ், வி.பவானி சுப்பராயன், அப்துல் குத்துாஸ், எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், சுப்ரமணியம் பிரசாத், என்.ஆனந்த் வெங்கடேஷ், சி.சரவணன் தலைமையில்,விசாரணை நடந்தது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நீதிபதிகள், எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர், நிஷா பானு, டி.கிருஷ்ண வள்ளி, எம்.நிர்மல்குமார், ஓய்வு பெற்ற நீதிபதி, ஏ.ஆர்.ராமலிங்கம் தலைமையில்

Advertisement

விசாரணை நடந்தது.இந்த லோக் அதாலத்தில், மொத்தம், 86 ஆயிரத்து, 638 வழக்குகளில், 283.88கோடி ரூபாய் அளவுக்கு, தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த தகவலை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர், ஏ.நஷிர் அகமது தெரிவித்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
09-டிச-201816:02:06 IST Report Abuse

Endrum Indianஅப்போ 4 .2 லட்சம் pending - 86 ,638 வழக்குகள் = அப்போ 3,33,362 வழக்குகள் தான் பாக்கியா, அது எப்போது முடியும்????

Rate this:
blocked user - blocked,மயோட்
09-டிச-201808:44:28 IST Report Abuse

blocked userநீதித்துறையை TCS, WIPRO போன்ற IT நிறுவனங்களுக்கு outsource செய்தால் வழக்குக்களை வெகு விரைவாக முடித்து வைப்பார்கள்... 60 ஆண்டுகளாக இந்திய நீதித்துறை நடத்தும் நீதி பரிபாலனம் உலகறிந்தது...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X