தலைமை செயலர் பெயரில் அவதூறு : சி.பி.சி.ஐ.டி., போலீசார், வழக்கு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தலைமை செயலர் பெயரில் அவதூறு : சி.பி.சி.ஐ.டி., போலீசார், வழக்கு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை, :சபரிமலை விவகாரத்தில், தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பெயரில், 'பேஸ்புக்'கில் வதந்தி பரப்பிய மர்ம நபர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார், வழக்கு பதிந்துள்ளனர்.'சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்லலாம்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை செயல்படுத்த, அம்மாநில அரசு முயன்று வருகிறது. இதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மாயா எஸ்.பிள்ளை என்ற, 'பேஸ்புக்' பக்கத்தில், சபரிமலை விவகாரத்தில், கேரள அரசுக்கு எதிராக, தமிழக தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் கருத்து தெரிவித்ததாக பகிரப்பட்டது.இதற்கு மறுப்பு தெரிவித்து, கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசுக்கு கடிதம் எழுதினார்.இதற்கிடையில், தலைமை செயலர் பெயரில் வதந்திகள் பரப்பியோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக பொதுத் துறை துணை செயலர், பன்னீர் செல்வம், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து, போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X