கொலை, தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மனைவி துாக்கிட்டு தற்கொலை
சென்னை, சாலிகிராமத்தைச சேர்ந்தவர், சதீஷ்குமார், 32; சினிமா துறையில் பணிபுரிகிறார். இவரது மனைவி கல்பனா, 28. காதலித்து திருமணம் செய்த இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த கல்பனாவை, சதீஷ்குமாருடன் சேர்ந்து வாழுமாறு, குடும்பத்தினர் வற்புறுத்தி வந்துள்ளனர். இதில், விருப்பமில்லாததால் மன உளைச்சலில் இருந்த கல்பனா, நேற்று முன்தினம் இரவு, துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவில் உயிரிழந்தார். விருகம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் தவறி விழுந்த மாணவர் பலி

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர், வினோத்குமார், 20; சென்னை அடுத்த திருவள்ளூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், இறுதியாண்டு படித்தார். இவர், நேற்றிரவு, 8:30 மணிக்கு, நண்பர் ராஸ்மிகா, 20, என்பவருடன், மின்சார ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். ரயில், அண்ணனுார் நிலையத்தை கடந்த போது, படியில் நின்றிருந்த இருவரும், ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட பொதுமக்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே வினோத்குமார் உயிரிழந்தார். ராஸ்மிகா, தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பஸ் மோதி இன்ஜி., மாணவன் பலி
சென்னை, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர், பாலாஜி, 18; சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், பொறியியல் இரண்டாமாண்டு படித்தார். இவர், உறவினர் உமாசங்கர், 18, என்பவருடன், நேற்று மதியம், 1:00 மணிக்கு, பிராட்வே, என்.எஸ்.சி.போஸ் சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, மாநகர பேருந்து மோதி கீழே விழுந்த பாலாஜி, பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். உமாசங்கர், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுனரான எட்வின், 46, என்பவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X