மாடல் அழகிக்கு தொல்லை பிரபல பாடகர் மிகா கைது| Dinamalar

மாடல் அழகிக்கு தொல்லை பிரபல பாடகர் மிகா கைது

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மாடல் அழகிக்கு தொல்லை பிரபல பாடகர் மிகா கைது

புதுடில்லி
ஐக்கிய அரபு எமிரேட்சில், 17 வயது மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பிரபல பாலிவுட் பாடகர் மிகா சிங்கை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.பாலிவுட் பாடகர் மிகா சிங், 41. சமீபத்தில், மத்திய கிழக்கு நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின், துபாய்க்கு, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மிகா சிங்கும், இசைக்குழுவினரும் சென்றிருந்தனர்.அப்போது, தெற்கு அமெரிக்க நாடான, பிரேசிலைச் சேர்ந்த, 17 வயது மாடல் அழகிக்கு, மொபைல் போன் வாயிலாக, ஆபாச படங்களை, மிகா சிங் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, சம்பந்தப்பட்ட பெண், துபாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மிகா சிங்கை, போலீசார் கைது செய்தனர். இந்தியாவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் உதவியை நாடியதை அடுத்து, மிகா சிங்கை, போலீசார் விடுதலை செய்தனர்.இது போன்ற புகாரில், மிகா சிங் குற்றஞ்சாட்டப்படுவது, இது முதல் முறை அல்ல. முன்னதாக, பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கு, வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்ததாக, மிகா சிங் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X