மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு| Dinamalar

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, ராஜஸ்தான் தேர்தலில், மக்க ஓட்டளித்த மின்னணு ஓட்டுபதிவு இயந்திரம், சாலையில் கேட்பாரற்று கிடந்தது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நேற்று முன்தினம், சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம், 199 தொகுதிகளுக்கு, ஒரே கட்டமாக, ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இங்கு, 73 சதவீத ஓட்டுகள் பதிவான தாக, தேர்தல் கமிஷன் தெரிவித்தது.ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், மின்னணு ஓட்டுபதிவு இயங்திரங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு, அவை, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்களுக்கு, பத்திரமாக எடுத்து செல்லப்பட்டன.இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், கிஷன்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட, சஹாபாத் என்ற இடத்தில், ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரம், சாலையில், கேட்பாரற்று கிடந்தது. இதுபற்றி, தகவல் பரவியதும், பரபரப்பு ஏற்பட்டது.தேர்தல் அதிகாரிகள், விரைந்து வந்து, அந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றினர். ஓட்டுப்பதிவு முடிந்து, இயந்திரங்களை எடுத்து செல்லும்போது, கவனக்குறைவாக செயல்பட்ட, அதிகாரிகள், அப்துல் ரஷீக், பத்வாரி நாவல் சிங் ஆகியோர், உடனடியாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X