'லோக் அதாலத்': ரூ.34 கோடி இழப்பீடு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'லோக் அதாலத்': ரூ.34 கோடி இழப்பீடு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நீதிமன்றம் சார்பில் 'லோக் அதாலத்' நடந்தது. இதில் 34 கோடி 44 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, சிவில், கிரிமினல் என 859 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. நீதிபதிகள் எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷாபானு, டி.கிருஷ்ணவள்ளி, எம்.நிர்மல்குமார், ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரித்தனர். 112 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. 11 கோடி 89 லட்சத்து 30 ஆயிரத்து 277 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மதுரை நீதிமன்றத்தில் 20 ஆயிரத்து 778 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. மாவட்ட முதன்மை நீதிபதி நசிமா பானு, நீதிபதிகள் கணேசன், கார்த்திகேயன், ராஜவேல், மீராசுமதி, பத்மநாபன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சத்தியமூர்த்தி விசாரித்தனர். 4,926 வழக்குகளில் சமரசம் ஏற்பட்டது. 22 கோடி 55 லட்சத்து 40 ஆயிரத்து 610 ரூபாய் இழப்பீடு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X