இறந்து கிடந்த பெண் சிறுத்தை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்து கிடந்த பெண் சிறுத்தை

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 இறந்து கிடந்த பெண் சிறுத்தை

கன்னிவாடி, திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான பண்ணைப்பட்டி அருகே, சிறுத்தைக்குட்டி இறந்து கிடந்தது.மாவட்ட வன அலுவலர் வித்யா, வன அதிகாரி மனோஜ்,வனவர் தண்டபாணி குழுவினர், முத்துப்பாண்டி கோயில் அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர் பாலக் குமார், பரிசோதனை செய்தார்.வனத்துறையினர் கூறுகையில், ''சுமார் 3 வயதுள்ள பெண் சிறுத்தை, பிற விலங்குகளுடன் ஏற்பட்ட சண்டையின்போது இறந்திருக்கலாம். உடலில், ஆழ்ந்த பல், நகக் கீறல்கள் இருந்தன. புதைத்தால், உடல் பாகங்களை பிறர் மீட்க வாய்ப்புள்ளது. எனவே, பரிசோதனைக்குப்பின் எரியூட்டப்பட்டது'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X