சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெயரில் போலி இ - மெயில்| Dinamalar

சுப்ரீம் கோர்ட் நீதிபதி பெயரில் போலி இ - மெயில்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் பெயரில், போலி இ - மெயில் முகவரி தொடங்கி, பலருக்கு, மெயில் அனுப்பிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருபவர், மதன் பீம் லோகூர். இவரது இ - மெயில் முகவரியை போலவே, போலியான முகவரி உருவாக்கி, அதன் மூலம், பலருக்கு, மெயில் அனுப்பப்பட்டு வருவது, சமீபத்தில் தெரிய வந்தது. ஒரு மர்ம நபர்,

நீதிபதியின் பெயரில், இந்த போலி மெயில் தகவல் பரிமாற்றத்தை செய்து வருவது, கண்டுபிடிக்கப் பட்டது.இது தொடர்பாக, உச்ச நீதிமன்ற கணினி பிரிவு, இணை பதிவாளர், அவதேஷ் குமார், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பெயரில், போலி, 'டுவிட்டர்' கணக்கு தொடங்கி, அதில் தரக்குறைவான தகவல்களை பரப்பி வந்தது, சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த போலி கணக்கு தொடங்கியவரை, போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், நீதிபதி மதன் பி.லோகூர் பெயரில், போலி இ - மெயில் அனுப்பப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X