நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் சுட்டு கொலை| Dinamalar

நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் ஜம்மு - காஷ்மீரில் சுட்டு கொலை

Added : டிச 09, 2018 | கருத்துகள் (6+ 19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள்  ஜம்மு - காஷ்மீரில் சுட்டு கொலை

புதுடில்லி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், நடப்பாண்டில், 232 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.கவர்னர் ஆட்சி நடக்கும் ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் மீது, பாதுகாப்பு படையினர் எடுத்த நடவடிக்கைகளை அடுத்து, அவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இது குறித்து, பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த, ஜூன், 25 முதல், செப்., 14 வரை, 80 நாட்களில், 51 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதே சமயம், பாதுகாப்பு படையினர் உட்பட, எட்டு பேர் உயிர்இழந்தனர்; 216 பேர் காயமடைந்தனர்.செப்., 15 முதல், டிச., 5 வரை நடந்த தாக்குதலில், 85 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பதில் தாக்குதலில், பொது மக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்; 170 பேர் காயமடைந்தனர்.காஷ்மீர் பள்ளத்தாக்கில், வெளிநாட்டினர் உட்பட, 240 பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தனர். அவர்களில், இந்த ஆண்டு மொத்தம், 232 பேர் கொல்லப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6+ 19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
09-டிச-201811:11:35 IST Report Abuse
pattikkaattaan இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படி சண்டையிட்டு, நம் வீரர்களை இழந்து . பொருளாதாரத்தில் பெரும்பகுதியை செலவழித்து , நாட்டு முன்னேற்றத்திற்கு ஊராக இருப்பது ... மத்திய அரசு ராஜாங்க ரீதியில் இதற்க்கு தீர்வு காண முயலவேண்டும் .. வன்முறையும் , தீவிரவாதமும் மனிதகுலத்திற்கு என்றும் எதிரானது என்பதை அவர்களுக்கு உணரவையுங்கள்
Rate this:
Share this comment
09-டிச-201811:29:52 IST Report Abuse
ராமகிருஷ்ணன்உணர்ந்து திருந்தும் ஜென்மங்கள் அங்கில்லை. மற்ற நாடுகளின் தீவிரவாதிகள் அங்கிருப்பதன் காரணமாய் அவர்களை விட்டு அணுகுண்டு போட வைக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
09-டிச-201808:52:03 IST Report Abuse
tamil எத்தனை பேர் இறந்தார்கள் அதில் தீவிரவாதிகள் எத்தனை பேர் பொது ஜனங்கள் எத்தனை பேர் என்கிற கணக்கு போடுவதே முதலில் தவறு இதில் நமக்கு என்ன பெருமை இருக்கிறது, அமைதியில் நல்லிணக்கத்தின் எத்தனை அடி முன்னேறி இருக்கிறோம் அது தான் சிறந்த அளவு கோல், அது தான் ஒரு சிறந்த ஆட்சியின் அடையாளம்
Rate this:
Share this comment
Cancel
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
09-டிச-201808:33:31 IST Report Abuse
தமிழ் மைந்தன் இந்த காங்கிரஸ் ஓட்டுக்களை கொல்வதையே பாஜக தொடர்ந்து செய்வது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X