உயர்நீதிமன்ற மதுரை கிளை செய்திகள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்ற மதுரை கிளை செய்திகள்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சுகாதாரத்துறை செயலாளர் மீது அவமதிப்பு வழக்குமதுரை ஆனந்தராஜ் தாக்கல் செய்த மனு: மூளைச்சாவு அடைவோரின் சிறுநீரகம், இதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளைதானமாக பெற்று, பலரின் உயிரை காப்பாற்ற முடியும். சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சில அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கிறது. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையங்களை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி, உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன்.2017 ஜன.,ல் நீதிபதிகள், 'அனைத்து அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உடலுறுப்பு மாற்று சிகிச்சை மையங்களைஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். இதை நிறைவேற்றவில்லை. சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறை முதன்மை செயலர் ரித்தீஷ் சவுகான் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு ராதாகிருஷ்ணன், ரித்தீஷ் சவுகானுக்கு நோட்டீஸ் அனுப்பி டிச.,19 க்கு ஒத்திவைத்தது.தமிழில் பெயர் பலகை தாமதம் அரசுக்கு நோட்டீஸ்ராமநாதபுரம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் வணிக மற்றும்பன்னாட்டு நிறுவனங்களின்பெயர் பலகைகளில்தமிழுக்கு பதிலாக, ஆங்கிலம்இடம்பெற்றுள்ளன. சிலர் சிறிய எழுத்துக்களில் தமிழை பயன்படுத்துகின்றனர். அரசு அலுவலகங்களிலும்இதே நிலைதான். கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளிலேயே பெயர் பலகைகள் உள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப்படி அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதன்மையாகதமிழைபயன்படுத்த வேண்டும். இதை முறையாக பின்பற்றவில்லை.அரசாணைப்படிதமிழில் பெயர் பலகைகள்வைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2017 ஜூலையில் நீதிபதிகள், 'அரசாணையை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.இதை அமல்படுத்தவில்லை. தமிழ் அலுவல் மொழி மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் வெங்கடேசன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு வெங்கடேசனுக்குநோட்டீஸ் அனுப்பி டிச.,19க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X