போலீஸ் செய்திகள்................| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்................

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மோசடி புகார் மதுரை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி பேரவை செயலாளர் பெரீஸ் மகேந்திரவேல். இவர், தென்மண்டல ஐ.ஜி.,யிடம் அளித்த புகார்: கல்லுாரி முன்னாள் பொருளாளர் மாரியப்பன், முன்னாள் செயலாளர் அசோகன். இவர்கள்ஒரு பில்லிற்கு 2 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்ததாக பொய் கணக்கு எழுதி கையாடல் செய்துள்ளனர். போலி வவுச்சர்கள் மூலம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 200 ரூபாய் என பல்வேறு வகைகளில் மோசடி செய்துள்ளனர். கரிக்கோல்ராஜ் துாண்டுதலின்பேரில் இது நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.தொழிலாளி கொலைசோழவந்தான்: கருப்பட்டி கூலி தொழிலாளி சந்திரசேகர்,48. இதே ஊரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,35. இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மதியம் கருப்பட்டி வைகை ஆற்று மயான பாதையில் சென்றசந்திரசேகரை அரிவாளால் வெட்டி கிருஷ்ணமூர்த்தி கொலை செய்தார். தப்பியோடியவரை சோழவந்தான் போலீசார் தேடி வருகின்றனர். தப்பியோடியவரை சோழவந்தான் போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை சம்பவத்தை கேள்விப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் திருநங்கை சகோதரி சாந்தி, 55, மாரடைப்பால் இறந்தார்.7 பேர் கைதுமேலுார்: கீழவளவு வீரகாளியம்மன் கோயில் திருவிழாவில்கும்மியடிக்கும் நிகழ்ச்சியில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் 89 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டனர்.கோயிலில் திருட்டு மேலுார்: ஆமூர் அய்யம்பொழில் ஈஸ்வரன் கோயில் கதவை உடைத்து பித்தளையால் ஆன சுவாமி சிலைகள், அம்மனின் தங்கத்தாலியை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இக்கோயிலில் கண்காணிப்பு கேமரா இல்லை. அலாரம் பழுதாகி உள்ளது. நகை திருடிய பெண்கள் திருமங்கலம்: விருஷங்குளம் ராமுத்தாய், 65. இவர் திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வந்தபோது 2 பவுன் நகையை திருமங்கலம் லட்சுமி,40, பைகாரா முத்துப்பட்டி தேவி,37, ஆகியோர் அறுத்துக்கொண்டு தப்ப முயன்றபோது பிடிபட்டனர். இவர்களிடம் பல்வேறு வழக்குகள் தொடர்புடைய 15 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.கல்குவாரி லாரி சிறைபிடிப்புதிருமங்கலம்: ஆலம்பட்டியில் கல்குவாரியில் இருந்து லோடு ஏற்றிக் கொண்டு ராயபாளையம் வழியாக நேற்று காலை லாரிகள் வந்தன. இதில் ஒரு லாரி ரோட்டோர மின்கம்பத்தில் மோதி டிரான்ஸ்பார்மர் புகைந்து மின்தடை ஏற்பட்டது. ஆத்திரமுற்ற மக்கள் மூன்று லாரிகளை சிறை பிடித்தனர். போலீசார் சமரசம் செய்தனர்.குண்டர் சட்டத்தில் கைதுதிருமங்கலம்: பாப்பாபட்டி சதீஷ்குமார்,48, அய்யனார்குளம் ராஜிவ்காந்தி,34. தொடர்ந்து மதுவிற்றதாக இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன் பரிந்துரைபடி கலெக்டர் நடராஜன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X