முதல்வரின் உடல்நிலை கோவா அரசு பதில் மனு| Dinamalar

முதல்வரின் உடல்நிலை கோவா அரசு பதில் மனு

Added : டிச 09, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
முதல்வரின் உடல்நிலை கோவா அரசு பதில் மனு

பனாஜி பா.ஜ.,வைச் சேர்ந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் உடல்நிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள, பொது நலன் வழக்கில், கோவா அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர், 62, தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் இருந்து, அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற அவர், டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில், சமூக ஆர்வலர், டிராஜானோ டிமெல்லோ என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தின், கோவா கிளையில், பொதுநலன் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதில், 'முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மையான நிலவரம் குறித்து தெரிவிக்கப்படவில்லை. இதனால், அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன' எனக் கூறப்பட்டுள்ளது.இதற்கு பதிலளித்து, மாநில அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், கூறியுள்ளதாவது:இந்த வழக்கில், பொதுநலன் ஏதுமில்லை. முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிகள் முடங்கியுள்ளதாகக் கூறுவதில் உண்மைஇல்லை. தொடர்ந்து, அமைச்சரவை கூட்டங்கள், அரசு திட்டங்கள் தொடர்பான கூட்டங்களில், முதல்வர் மனோகர் பரீக்கர் பங்கேற்று வருகிறார்.தனது உடல்நிலை குறித்த தகவலை ரகசியமாக வைத்திருக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. எனவே, தனிமனித உரிமையை மீறும் வகையில் உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201814:11:23 IST Report Abuse
தமிழ்வேல் அவருக்கு ஓய்வுகொடுத்து நலமடைந்த பிறகு பணியைத் தொடரச் செய்யலாமே. வேறு ஆட்களே இவர்களுக்கு கிடைக்கவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
09-டிச-201813:35:20 IST Report Abuse
சுந்தரம் தமிழ்நாட்டில் ஒரு முதல்வர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது இங்குள்ள பாஜக, மருத்துவ அறிக்கை வெளியிட வேண்டும் என்கிறார்கள். அதுபோல பிரிதொரு மாநிலத்தில் முதல்வர் உடல்நலம் குன்றி மருத்துவ மனையில் இருந்தால் மருத்துவ அறிக்கை வேண்டாம் என்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
09-டிச-201813:20:43 IST Report Abuse
karutthu முதல்வர் அந்த மாநிலத்திற்கு முக்கியமானவர் .அவர் உடல் நிலை பட்டய செய்தி வெளிப்படையாக இருக்க வேண்டும் அவர் மக்களை பார்க்கும் வகையில் இருக்கவேண்டும் உதாரணம் தமிழ் நாடு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X