பழுதான பள்ளி கட்டடத்தால் கல்வி கற்க அச்சம்: மேற்கூரை இடிந்து விழும் அவலம் | Dinamalar

தமிழ்நாடு

பழுதான பள்ளி கட்டடத்தால் கல்வி கற்க அச்சம்: மேற்கூரை இடிந்து விழும் அவலம்

Updated : டிச 09, 2018 | Added : டிச 09, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பழுதான பள்ளி கட்டடத்தால் கல்வி கற்க அச்சம்: மேற்கூரை இடிந்து விழும் அவலம்

அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் அருகே கொழிஞ்சிப்பட்டியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கூரைகள் அடிக்கடி இடிந்து விழுவதால் மாணவர்களும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர்.இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தரமற்ற கட்டுமானத்தால் வகுப்பறை மேற்கூரை, சிலாப்புகள் அடிக்கடி விழுகின்றன. இதனால் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர்.ராஜா: 20 ஆண்டுகள் பழமையான இக்கட்டடத்தின் கான்கிரீட் கம்பிகள் துருப்பிடித்து இடியும் நிலையில் உள்ளது. மராமத்து பணிகளும் நடப்பதில்லை. கடந்த மாதம் தொடர்ந்து மழைபெய்ததால் கட்டட சுவர்கள் விரிசலடைந்து மேற்கூரை, சிலாப்புகள் சிதிலமடைந்தன. மாணவர்கள் கட்டட விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. கல்வி அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இங்குள்ள பழுதான கட்டடங்களை இடித்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-டிச-201813:12:24 IST Report Abuse
மதுவந்தி விபத்து நடக்கும் முன் சரி செய்ய வேண்டும். தவறாமல் ஒவ்வொரு முறையும் மாணவர்கள் விடுமுறை காலத்தில் மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
10-டிச-201803:02:51 IST Report Abuse
Manianநடகாத்த கற்பனை தான். இதுவும் ஒரு விதத்தில் ஜனத்தொகை பெருக்கத்தை தடுக்கும் வழிதான் என்கிறார் ஒரு அரசாங்க வியாதி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X