விதை முளைப்பு திறனை நிர்ணயிக்கும் ஈரப்பதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதை முளைப்பு திறனை நிர்ணயிக்கும் ஈரப்பதம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் விதையின் முளைப்பு திறனை நிர்ணயிக்கும் ஈரப்பதம் குறித்து விதை பரிசோதனை நிலைய அலுவலர்கள் ஆலோசனை வழங்கினர்.விதையின் முளைக்கும் திறனை நிர்ணயிக்கும் காரணிகளுள் முக்கிய பங்கு வகிப்பது ஈரப்பதம். விதை சேமிப்பின் போது ஈரப்பதத்தை பொறுத்தே அதன் தரம் அமையும். பூச்சி மற்றும் பூஞ்சானம் தாக்குதலால் விதைகள் பாதிக்காமலிருக்க தகுந்த ஈரப்பதம் உள்ளவாறு விதைகளை காய வைத்து சேமிக்க வேண்டும்.ஈரப்பதம் உள்ளதா என ஆய்வு செய்து விதைத்தால் விதையின் முளைப்பு திறன் நன்றாக இருக்கும். பரிசோதனை நிலையத்தில் ஈரப்பதத்தை சோதனை செய்து அதன் பிறகு விதைக்கலாம்.விதையின் ஈரப்பதம் நெல்லில் 13 சதவீதம், சோளம், கம்பு, ராகி 12 சதவீதம், பயறு வகை 9 சதவீதம், நிலக்கடலை, எள் 9 சதவீதம், ஆமணக்கு 8 சதவீதம் மற்றும் காய்கறிகள் 7 -8 சதவீதம் இருக்க வேண்டும். விதையின் தரம் அறிந்து விதைக்க வேண்டும் என, விதை பரிசோதனை அலுவலர் அமுதன், வேளாண் அலுவலர்கள் ராஜேஸ்வரி, சவுந்திரம்மாள் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X