பெண்ணே நீ நலமா...!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணே நீ நலமா...!

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'இ---மெயில்', 'பேஸ்புக்', 'வாட்ஸ்-ஆப்' என, இன்றைய இளைஞர்களின், 'லைப் ஸ்டைல்' மொபைல்போனை சுற்றியே உள்ளது. எதையும் காது கொடுத்து கேட்பதற்கும், தெரிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு நேரமும் இல்லை; பொறுமையும் இருப்பதில்லை.'ஆடுற மாட்டை ஆடித்தான் கறக்கணும்... பாடுற மாட்டை பாடித்தான் கறக்கணும்'ங்கற மாதிரி, அவர்களின் வழியே அவர்களுக்கு, தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிபுணர் குகனின், இம்முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது.இளைஞர்களுக்கு மிக முக்கிய பிரச்னையான, 'புகையிலை புற்றுநோய்', இளம்பெண்களுக்கு 'மார்பக புற்றுநோய்' இவ்விரண்டையும் ஆரம்ப காலத்திலேயே சுய பரிசோதனை செய்யும் வகையில், இவர் வடிவமைத்த, 'Breast cancer Awareness SRIOR' செயலிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.அவர் நம்மிடம் பகிர்ந்தவை...இப்போதெல்லாம், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே மார்பக புற்றுநோய் வருகிறது. இவர்கள், நோய்க்கான அறிகுறி தெரியாமல், முற்றிய நிலையிலே டாக்டரிடம் வருகின்றனர். 'பிளே ஸ்டோரில்' டவுன்லோடு செய்து, இந்த 'ஆப்' மூலம், 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களுக்குள் சுய பரிசோதனை செய்யலாம். மார்பக புற்றுநோய் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், ஒரு டாக்டரும், நோயாளியும் உரையாடுவதுபோல், அனிமேஷன் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.இதை, www.breastcancersrior.com என்ற இணையதளத்தில் பார்வையிடலாம். மார்பகப் புற்றுநோய் என்றால் என்ன, அதன் காரணங்கள், வெவ்வேறு நிலைகள், அறிகுறிகள், ஆரம்ப நிலையில் கண்டறியும் வழிமுறைகள், அதன் முக்கியத்துவம், பரிசோதனைகள், பலதரப்பட்ட சிகிச்சை முறைகள், வரும் முன் தடுக்கும் வழிமுறைகள், மார்பகப் புற்றுநோய் முழுவதும் குணமாகி, ஆரோக்கியத்துடன் இருப்பவர்களின் அனுபவங்கள் ஆகியவை, தனித்தனி வீடியோக்களாக தொகுக்கப்பட்டுள்ளன.தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும், தலா அரை மணி நேரம் ஒளிபரப்பாகும் வகையில் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. புகையிலை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ள இளைஞர்களுக்கு, புற்றுநோய் பாதிப்பின் ஆரம்ப நிலையை கண்டறியவும் விழிப்புணர்வு வீடியோக்கள் உள்ளன. இதனை இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். நோய் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிய முடிவதால், அப்பழக்கத்தை முன்கூட்டியே கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவியாக உள்ளதாக, அவர்கள் கூறும்போது, முயற்சியின் பலனை உணர முடிகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X