வெட்டிவேரு வாசம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெட்டிவேரு வாசம்!

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

எட்டி நிற்போரையும் கட்டி இழுக்கும் நறுமணத்தை கொண்டது வெட்டிவேர். இதன் மருத்துவ பயன்கள் நாம் அறிந்ததே. வெட்டிவேரை மருத்துவம், அழகுசாதன பொருட்களாக மட்டுமின்றி, அலங்கார பொருட்களாகவும் மாற்றலாம் என்கிறார், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் இயக்குனர் மகேந்திரன். தவிர, இவ்வேரை பயன்படுத்தி மவுத்வாஷ், டீ மற்றும் காபி பவுடர், மேக் அப் பவுடர் என, கண்காட்சியில் வைக்கப்பட்ட உற்பத்தி பொருட்கள் வரிசை நீண்டுள்ளது.கோவை வேளாண் பல்கலையின், வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில், தொழில்நுட்ப வணிக காப்பகம் விரிவாக்க நிகழ்ச்சி, நேற்று துறை அரங்கில் நடந்தது. தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், வணிக காப்பகம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இக்காப்பக உறுப்பினர்களான, தொழில்முனைவோரின் உற்பத்தி பொருட்கள் மற்றும் கண்டுபிடிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட உள்ளன.பல்கலை துணைவேந்தர் குமார், விரிவாக்க காப்பகத்தை திறந்து வைத்தார். இதில், தொழில்முனைவோரின் படைப்புகளான, வெட்டிவேரு அலங்கார பொருட்கள், மருத்துவ பவுடர்கள், வாழை நாரில் தயாரிக்கப்பட்ட, பெண்கள் பயன்படுத்தும் கைப்பை, கூடை, பாக்குமட்டைகளால் தயாரிக்கப்பட்ட தட்டு, ஸ்பூன், பல்வேறு வடிவங்களிலான கிண்ணங்கள், ஆர்க்கானிக் பழச்சாறுகள், ரெடிமேட் சூப் பவுடர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்முனைவோர், தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெறலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.'நபார்டு' நிதியுதவியுடன் அமைத்துள்ள இம்மைய திறப்பு விழாவில், மும்பை நபார்டு வங்கி துணை நிர்வாக இயக்குனர் அமலோர்பவநாதன், சென்னை நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் பத்மரகுநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X