எழுதினால் பேனா...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எழுதினால் பேனா...

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 எழுதினால் பேனா...

கோவையில் நடந்து வரும் கைவினை பொருட்கள் கண்காட்சியில், காகிதத்தால் செய்யப்பட்ட விதைப்பேனா பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.இன்றைய நவீன காலத்தில், வாகன புகை, பிளாஸ்டிக் குப்பை, ரசாயன கழிவுகள் என, பல்வேறு வழிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்னென்ன என்று பட்டியலிட்டால், ஆடை, அணிகலன்கள், அழகுசாதன பொருட்கள், வாகனங்கள், மொபைல்போன், பேக் என சொல்லிக்கொண்டே போகலாம். இதில், முக்கியமான ஒன்று பேனா.முன்பெல்லாம் இங்க் பேனாக்களே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இன்றோ, எங்கு பார்த்தாலும் 'யூஸ் அன் த்ரோ' பேனாக்களையே காண முடிகிறது. இதனால், சுற்றுச்சூழல் எந்தளவு பாதிக்கிறது என்பதை யாரும் சிந்திப்பதில்லை.இதற்கு மாற்றுவழியை கண்டுபிடித்துள்ளார், கேரளா, எல்.ஜி.பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரமோத்,36. மாற்றுத்திறனாளியான இவர், பிளாஸ்டிக் பேனாக்களின் பயன்பாட்டை குறைப்பதற்காக, இவ்வகை விதை பேனாக்களை உருவாக்கி, விற்பனை செய்து வருகிறார்.பழைய காகிதங்களை பயன்படுத்தி பேனா தயாரித்துள்ளார். அதன் அடிப்பகுதியில், விதைகள் வைக்கப்பட்டுள்ளன. உபயோகப்படுத்தி விட்டு, துாக்கி வீசினாலும் மரமாக வளரும்; தொலைத்து விட்டாலும் கவலை வேண்டாம்; எங்கோ ஒரு பகுதியில் மரமாக வளரும். இச்சிறப்புமிக்க பேனா விலை, 10 ரூபாய் மட்டுமே.கோவை அவிநாசி ரோட்டில், மீனாட்சி மகாலில் துவங்கியுள்ள கைவினை பொருட்கள் கண்காட்சியில், வைக்கப்பட்டுள்ள் இப்பேனாக்களை, பார்வையாளர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X