ஐயோ... தெய்வமே... ஆள விடுங்க! ஓட்டம் பிடித்தார் இயக்குனர் ராஜீவ்மேனன் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐயோ... தெய்வமே... ஆள விடுங்க! ஓட்டம் பிடித்தார் இயக்குனர் ராஜீவ்மேனன்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஐயோ... தெய்வமே... ஆள விடுங்க! ஓட்டம் பிடித்தார் இயக்குனர் ராஜீவ்மேனன்

சினிமாவில் நீண்ட காலமாக நிலைத்து நிற்பது மட்டுமல்ல... ஒரே ஒரு படம் இயக்கினாலும், காலத்துக்கும் மக்களால் பாராட்டப்பட வேண்டும். அப்படியொரு திறமைக்கு சொந்தக்காரர், திரைப்பட இயக்குனர் ராஜீவ்மேனன்.மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய வெற்றி படங்களின் இயக்குனரான இவர், பம்பாய், குரு, கடல் உள்ளிட்ட மணிரத்னம் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பின், 'சர்வம் தாள மயம்' படம் மூலம் மீண்டும் களம் இறங்கியுள்ளார்.நமது நாளிதழுக்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி:சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இடைவெளி ஏன்?எந்த ஒரு படம் பண்ணும்போது, எனக்குள் ஒரு வளர்ச்சி இருக்கும் என்று தோன்றினால் மட்டுமே ஆர்வம் காட்டுவேன். அந்த ஆர்வம் இப்போதுதான் உதித்துள்ளது. இனி நிறைய படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளேன்.சர்வம் தாள மயம் படத்தை பற்றி சொல்லுங்களேன்...இசைக்கருவிகள் தயாரிக்கும் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவன், இசைக்கலைஞராக ஆசைப்படுகிறான். அவனுடைய வாழ்க்கை பயணமே இப்படம். படத்தில், ஏ.ஆர்.ரகுமானின் இசை ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கும். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் ஒரு பாடல் வரிகளும் இடம் பெற்றுள்ளது.உங்களுடைய பார்வையில் இசை என்பது...இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேர், பாடல்களை விரும்பி கேட்கின்றனர். ஆனால், கேட்பதோடு அல்லாமல், அதோடு சேர்ந்து நாமும் பாடினால், அந்த இசை நமக்கு சொந்தமாகும்.நீங்கள் ஒளிப்பதிவு செய்த பம்பாய் படத்தில், உங்களுக்கு பிடித்த காட்சி?ஒரு கட்டத்தில், காதலனுக்காக, மனிஷா கொய்ராலா வீட்டை விட்டு வெளியேறுவார். மனதை பறிகொடுத்தாலும், மதத்தை விட்டுக்கொடுக்காமல், உடன், 'குர்ஆன்' எடுத்துச் செல்லும் காட்சி, மிகவும் தத்ரூபமாக அமைந்திருக்கும்.சமீபத்தில் வந்த படங்களில் பிடித்தது எது?பரியேறும் பெருமாள், 96 ஆகிய படங்கள் மிகவும் கவர்ந்தவை.மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுக்கும் ஆசை உண்டா...?அவர், இப்பொது மிகப்பெரிய ஸ்டார். கதைகள் நிறைய என்னிடம் இருக்கு. நேரமும் காலமும் கூடி வந்தால் நிச்சயம் படம் பண்ணுவோம்.உங்களுடைய அடுத்த படம்...திரில்லரை மையமாக வைத்து, கதை எழுதி வருகிறேன். முழுமை அடைந்ததும், படத்தின் நாயகன், நாயகி பெயர் அறிவிக்கப்படும்.நடிக்கிறதுக்கு ஐடியா வெச்சுருக்கீங்களா...ஐயோ... தெய்வமே ஆள விடுங்க... என்று சிரித்தபடி விடைபெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X