புதியபாதை: மணல் திருடர்களுக்காக அமைப்பு  அணைப்பட்டி விவசாயிகள் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதியபாதை: மணல் திருடர்களுக்காக அமைப்பு  அணைப்பட்டி விவசாயிகள் புகார்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நிலக்கோட்டை:அணைப்பட்டி பேரணையில் தடுப்பணை அமைக்க கரை அமைப்பதில் மணல் திருட்டிற்கு வசதியாக பாதை விடப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.அணைப்பட்டி வைகை ஆற்றில் திண்டுக்கல் மாவட்டம், மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, உசிலம்பட்டி ஒன்றியங்களுக்காக குடிநீர் கிணறுகள் உள்ளன. மழைப் பொழிவு நன்றாக இருந்ததால் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டதில்லை.சமீப காலங்களாக மழைப் பொழிவு குறைந்து ஆற்றில் தண்ணீர் வருவதே அதிசயமாக உள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் குடிநீர் கிணறுகளுக்கு ஊற்று கிடைத்து தண்ணீர் பிரச்னை ஓரளவு குறையும். இதனால் பொதுமக்கள் வைகை ஆற்றில் தடுப்பணை கட்ட வலியுறுத்தினர். ரூ.15 கோடியில் தடுப்பணை கட்டும் பணி மழைக் காலத்திற்கு முன் துவங்கியது.முதற்கட்டமாக ஆற்றுக்குள் இருபுறமும் மணலால் ஆன கரை கட்டப்பட்டது. இதில், மணல் வண்டிகள் திருடுவதற்கு வசதியாக குண்டலப்பட்டி சுடுகாட்டுப் பகுதியில் மட்டும் இடைவெளி விட்டுள்ளனர். பொதுப்பணித் துறையினரும் இதனை ஏனோ கண்டு கொள்ளவில்லை. இதனால் நாள்தோறும் மணல் வண்டிகள் தாராளமாக ஆற்றுக்குள் வந்து மணல் அள்ளிச் செல்கின்றன. விவசாயிகள் இந்த இடத்திலும் சேர்த்து கரையை கட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுப்பணித் துறை கரையை முழுமையாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X