துப்பாக்கி காட்டி மிரட்டல்: ஒருவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி காட்டி மிரட்டல்: ஒருவர் கைது

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 துப்பாக்கி காட்டி மிரட்டல்: ஒருவர் கைது

வடவள்ளி:வீரகேரளம் பகுதியில், 'டாஸ்மாக்' பாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.வீரகேரளம் பகுதியில், இரண்டு 'டாஸ்மாக்' கடைகள் செயல்படுகின்றன. இதில், பாருடன் கூடிய மதுக்கடையில் நேற்று முன்தினம் இரவு மது குடிக்க வந்த ஒருவர், பாரில் வேலைபார்ப்பவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.சுதாரித்த பணியாளர்கள், அவனிடம் இருந்து துப்பாக்கியை பறித்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், துப்பாக்கி காட்டி மிரட்டியவரை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்த, 22 ரக ஏர்பிஸ்டல் துப்பாக்கி, வாக்கிடாக்கி மற்றும் 'லேப்-டாப்' ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், செல்வபுரம், ரங்கசாமி காலனியை சேர்ந்த சிவக்குமார், 39, என்பதும், மதுபோதைக்கு அடிமையாகி இருப்பதும் தெரியவந்தது. இவருக்கு சிறிது மனநல பாதிப்பு இருப்பதாகவும், சிகிச்சை பெற்று வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். எலக்ட்ரானிக் பொருட்களில் ஆர்வம் இருப்பதால், வாக்கிடாக்கி மற்றும் 'லேப்-டாப்'களை பழைய மார்க்கெட்டில் வாங்கியதாகவும், விளையாட்டுத்துறையில் பயன்படுத்தும் துப்பாக்கி என்றும், சிவக்குமார் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வாக்கிடாக்கியில் உள்ள எண்ணை கொண்டு, எங்கிருந்து வந்தது என கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று, கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X