'வன்கொடுமைக்கு எதிரான மவுனத்தை கலைப்போம்': விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோஷம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வன்கொடுமைக்கு எதிரான மவுனத்தை கலைப்போம்': விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோஷம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

குன்னுார்:குன்னுார் இந்திய குடும்ப நல சங்கம் சார்பில், 'வன்கொடுமைக்கு எதிரான மவுனத்தை கலைப்போம்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.மைய ஒருங்கிணைப்பாளர் பிரீத்தி தலைமை வகித்தார். பயிற்றுனர் மரியா பேசுகையில், ''அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நாளிதழ்கள், ஊடகங்களில் வன்கொடுமை நடப்பது குறித்த செய்திகள் வருகின்றன. பெண்களுக்கு சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. ஆண், பெண் பேதம் பார்க்கப்படுகிறது. பெண்கள் வேலை செய்யும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர். உறவினர்களால் கூட குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். வன்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்போம்,'' என்றனர்.குடும்ப நல சங்க கிளை திட்ட அலுவலர் ராஜேஷ் பேசுகையில், ''ஆண், பெண் உறவு சமம் அற்ற அதிகார நிலையிருப்பதால், வன்முறை ஏற்படுகிறது. பெண்களை தாழ்வாக ஆண்கள் நினைக்கின்றனர். இதனால், பெண்கள் உடல், மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். வன்கொடுமைகள் குறித்து தக்க ஆலோசகரிடம் அல்லது நம்பகமான மையம், காவல் துறை, டாக்டர்களிடம் தெரிவிக்கலாம், '' என்றார்.செவிலியர் பாலாம்பிகா பேசுகையில், 'பெண்களுக்கு எதிராக சமூக நிலையிலும் வன்முறைகள் நடக்கின்றன. சிறுவர், சிறுமியர் மீதும் வன்முறை, வேலை செய்யும் இடம், படிக்கும் இடங்களில் மிரட்டல், வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கிறது,'' என்றார்.தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. சிம்ஸ்பார்க், பாஸ்டியர் நிறுவன வளாகம் பகுதிகளில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிரகதி மைய மேற்பார்வையாளர் ஆல்வின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிளை மேலாளர் வரதராஜன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X