உலக சுகாதார நிறுவன தரத்தில் குன்னுார் பாஸ்டியர் நிறுவனம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உலக சுகாதார நிறுவன தரத்தில் குன்னுார் பாஸ்டியர் நிறுவனம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி:'குன்னுார் பாஸ்டியர் நிறுவனத்தில் வர்த்தக ரீதியில், 130 மில்லியன் குப்பிகள் (டோஸ்) தடுப்பூசி உற்பத்தி செய்யும் வகையிலான திட்டம் தயாராகி வருகிறது,' என, தெரிவிக்கப்பட்டது.ஊட்டி, ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், 57வது தேசிய பார்மசி வார விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக குன்னுார் பாஸ்டியர் நிறுவன தலைவர் டாக்டர் சிவக்குமார் பங்கேற்று பேசுகையில், ''குன்னுார் பாஸ்டியர் நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்தின் தரத்திற்கு ஈடாக, 137 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி உற்பத்தி செய்யும் பணி தொடங்கப்பட்டு, மத்திய அரசின் தர மதப்பீட்டு ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. வர்த்தக ரீதியிலான உற்பத்தி, 2020ம் ஆண்டு தொடங்கப்படும். ஆரம்ப கட்டத்தில், 130 மில்லியன் குப்பிகள் (டோஸ்) தடுப்பூசி உற்பத்தி செய்கின்ற வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், 40 சதவீத தடுப்பூசியை பூர்த்தி செய்கின்ற வகையில் உற்பத்தி செய்யப்படும். இவ்வாறு, சிவக்குமார் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X