கட்டடத்துக்கு 'சீல்' வைத்ததால் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டடத்துக்கு 'சீல்' வைத்ததால் நகராட்சி கமிஷனர் இடமாற்றம்

Added : டிச 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்:ஆளுங்கட்சியை சேர்ந்தவரின் விதிமீறிய கட்டடத்திற்கு 'சீல்' வைத்ததை தொடர்ந்து, குன்னுார் நகராட்சி கமிஷனர் சரஸ்வதி, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்.நீலகிரி மாவட்டம், குன்னுாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகராட்சி கமிஷனராக சரஸ்வதி பொறுப்பேற்றார். நகராட்சிக்கு சொந்தமான பஸ் ஸ்டாண்ட் கடைகளை உள்வாடகைக்கு விட்ட நபர்களை வெளியேற்றி, நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். நகராட்சி வருமானத்தை பெருக்கும் வகையில், நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட்டில், உள்வாடகை கடைகளை மீட்டெடுக்கவும் அதிரடி முயற்சிகள் மேற்கொண்டார்.இந்நிலையில், ஆளுங்கட்சியின் முன்னாள் கவுன்சிலர் யோகேஷ் என்பவர் விதிமுறைகளை மீறி, 'அபார்ட்மென்ட்' கட்டி வந்தார். அந்த அபார்ட்மென்ட்டிற்கு கடந்த, 6ம் தேதி, 'சீல்' வைத்தனர்.இந்நிலையில், நேற்று சென்னை நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, நிர்வாக ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள உத்தரவில், 'குன்னுார் நகராட்சி கமிஷனர் வேலுார் மாநகராட்சியின் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்,' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
10-டிச-201814:40:59 IST Report Abuse
Siva நல்லது செய்ய சில பேர் தான் உள்ளனர்.. அவர்கள் மனம் நொந்தால். .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X