ஆக்கிரமிப்பு கடைகள் கலெக்டர் தலைமையில் ஆய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு கடைகள் கலெக்டர் தலைமையில் ஆய்வு

Added : டிச 09, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார்.ஊட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா பகுதிகளில், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக, ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து, படகு இல்லம் நிர்வாகம், 48 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற,'நோட்டீஸ்' வழங்கியது.தொடர்ந்து, படகு இல்லம் சிறு வியாபாரிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்ததுடன், ஊட்டி வந்த அமைச்சர் வேலுமணியை சந்தித்து, சிறு வியாபாரிகள் தங்களது நிலையை தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று படகு இல்லம், தாவரவியல் பூங்கா பகுதிகளில் கலெக்டர் தலைமையில், ஆய்வு செய்யப்பட்டது.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், '' சுற்றுலா பயணிகளின் நலன் கருதி ஆக்கிரமிப்பு கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
10-டிச-201814:46:47 IST Report Abuse
Siva சிறு வியாபாரி எங்கும் ஆக்கிரமிப்பு செய்து கடை வைக்கலாம்.. அந்த இடத்தில் வணிகவளாகம் வந்தால் தடுக்கலாம்.. வாடகை கட்ட கசக்கும்... ஓசி பொருளுக்கு அலையும்................ சரி கட்டினா போதும... கொள்ளை லாபம்.. கேட்பார் இல்லை... என்ன தேசமோ... என்ன நிர்வாகமோ.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X