'இணையதளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இணையதளத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்'

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உத்தமபாளையம்:''இணையதள சேவையை மாணவர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்,''என, பாஸ்கரன் எஸ்.பி., அறிவுரை கூறினார்.ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம்.மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா நினைவு விளையாட்டு திடல் திறப்பு விழா, இறகுப்பந்து உள்விளையாட்டுஅரங்கு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. பள்ளி தாளாளர் எம்.எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். தலைமையாசிரியை கலாராணி முன்னிலை வகித்தார். பொன்விழா நினைவு விளையாட்டு திடலை திறந்து வைத்து பாஸ்கரன் எஸ்.பி., பேசியதாவது: 3 ஆயி ரம் மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இம் மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஸ்மார்ட் போன் கள் மற்றும் இணையதளம், உலகத்தை நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்து சேர்க்கிறது. அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், என்றார். ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று மத்திய அரசின் அர்ஜூனா விருது பெற்ற சார்லஸ்புரோமியோ, இறகுபந்து உள்வி ளையாட்டரங்கிற்கு அடிக்கல் நாட்டினார். 20 ஆண்டாக பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமையாசிரியை ஆர்.கீதாகிறிஸ்டிதனசீலி, விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். கடந்த அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை, முதன்மைக்கல்விஅலுவலர் மாரிமுத்து பாராட்டினார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் உதயகணேசன், மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். உதவி தலைமையாசிரியர் தாமஸ் நன்றி கூறினார். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விளையாட்டுப்போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X