அமராவதி ஆயக்கட்டு பாசன காலம் நீடிப்பு!.இரு போகத்துக்கு கைகொடுக்கும் தண்ணீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆயக்கட்டு பாசன காலம் நீடிப்பு!.இரு போகத்துக்கு கைகொடுக்கும் தண்ணீர்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
  அமராவதி ஆயக்கட்டு பாசன காலம் நீடிப்பு!.இரு போகத்துக்கு கைகொடுக்கும் தண்ணீர்

.உடுமலை:உடுமலை அமராவதி அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, கூடுதலாக வரும், 12 முதல் ஜன., 31ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படுகிறது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்துார் ஆகிய எட்டு ராஜவாய்க்கால்களுக்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, ஜூலை, 23ல் தண்ணீர் திறக்கப்பட்டு, நவ.,19ல் பாசன காலம் நிறைவு பெற்றது.செப்.,20 முதல், தாராபுரம், கரூர் தாலுகாவிலுள்ள, 10 பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களுக்குட்பட்ட, 21,867 ஏக்கர் நிலங்கள் மற்றும் மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,250 ஏக்கர் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, டிச., 4 வரை, சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, நெல், கரும்பு உள்ளிட்ட நிலைப்பயிர்களுக்கு கூடுதல் நீர் தேவை என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதனை ஏற்று, வரும், 12ம் தேதி முதல் ஜன.,31 வரை, பாசன காலம் நீடிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.அமராவதி பழைய 10 பாசன கால்வாய் பாசனத்திற்குட்பட்ட நிலங்களுக்கு, சுற்றுக்கள் அடிப்படையில், 2,570 மில்லியன் கனஅடி நீர், புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, 1,330 மில்லியன் கனஅடி நீர் என, 3,900 மில்லியன் கனஅடி நீர் சுற்றுக்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.இரண்டாம் போக நெல் சாகுபடிஅமராவதி பழைய ஆயக்கட்டு, எட்டு ராஜவாய்க்கால் பாசன நிலங்களில், முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை முடிந்ததும், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், இரண்டாம் போகத்திற்கும் முழுமையாக தண்ணீர் வழங்கப்பட உள்ளது.அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி அணை நீர்மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில், 85.70 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 317 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 13 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.ஆண்டு முழுவதும் திருப்தி இந்தாண்டு பருவ மழைகள் திருப்தியாக பெய்ததால், அமராவதி அணை, ஜூலை, 16, ஆக.,3, அக்.,8 மற்றும் நவ.,18 என நான்கு முறை நிரம்பியது. மழைக்காலங்களில், அணை பாதுகாப்பு கருதி, 85 அடிக்கு மேல் கிடைக்கும் நீர் உபரியாக வெளியேற்றப்பட்டது.உபரிநீரும் வீணாகாமல், ஆறு மற்றும் பிரதான கால்வாயில், பாசன நிலங்கள் மற்றும் வழியோரத்திலுள்ள குளங்கள் பயன்பெறுமாறு திறந்து விடப்பட்டது. கடந்த, 11 மாதங்களில் பெரும்பாலும், அணை நீர்மட்டம், 85 அடி என்ற நிலையிலேயே இருந்தது.பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்தாண்டு அணையில் திருப்தியான நீர்இருப்பு மற்றும் முழுமையான அளவு பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X