அமராவதி ஆலை கேட்டை பூட்டி போராட்டம்: நிலுவை சம்பளம் தர தொழிலாளர்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆலை கேட்டை பூட்டி போராட்டம்: நிலுவை சம்பளம் தர தொழிலாளர்கள் கோரிக்கை

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அமராவதி ஆலை கேட்டை பூட்டி போராட்டம்: நிலுவை சம்பளம் தர தொழிலாளர்கள் கோரிக்கை

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலை அலுவலக கதவுகளை பூட்டி, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலை தொழிலாளர்களுக்கு பல மாதம் சம்பள நிலுவை உள்ளது. நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து, பலமுறை போராட்டம் நடந்தது.ஒவ்வொரு முறையும், நிர்வாகத்தினர் சமரசம் பேசி அமைதிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம், ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள், மீண்டும் போராட்டம் தொடங்கினர். நேற்று, ஆலை அலுவலக கதவுகளை பூட்டி போராட்டம் நடத்தினர். இதனால் வடிப்பாலை மற்றும் ஆலை அலுவலகத்தில் பணிகள் முடங்கின. இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 'ஐந்து மாத சம்பளம் நிலுவையாக உள்ளது.பத்து முறைக்கும் மேல், போராட்டம் நடத்தி உள்ளோம். ஒவ்வொரு முறையும் வாக்குறுதி வழங்குகின்றனர். அதை நம்பி பணிக்கு சென்றோம். ஆனால், இன்று வரை சம்பளம் வழங்கவில்லை. எங்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்' என்றனர்.நிர்வாக இயக்குனர் ரமணிதேவி கூறுகையில், ''இன்று ஒரு மாத சம்பளமும், நாளை (10ம் தேதி) ஒரு மாத சம்பளமும் வழங்கப்படும்' என்றார். ஆனால், இதை தொழிலாளர்கள் ஏற்கவில்லை. இதனால், போராட்டம் நீடித்தது.போராட்டம் கைவிடப்பட்டதுஇந்நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு, நாளை (10ம் தேதி) மூன்று மாத சம்பளம் வழங்கப்படும் என ஆலை நிர்வாகத்தினர் உறுதி வழங்கினர். இதையடுத்து இரண்டு நாட்களாக தொழிலாளர் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டு முடிவுக்கு வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X