அழகை இழக்கும் அமராவதி முதலை பண்ணை : மேம்படுத்த நிதி ஒதுக்குது அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அழகை இழக்கும் அமராவதி முதலை பண்ணை : மேம்படுத்த நிதி ஒதுக்குது அவசியம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அழகை இழக்கும் அமராவதி முதலை பண்ணை : மேம்படுத்த நிதி ஒதுக்குது அவசியம்

உடுமலை:உடுமலை அருகேயுள்ள, முதலைப்பண்ணையை மேம்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, அமராவதி அணை அருகே, வனத்துறை சார்பில், முதலைப்பண்ணை உள்ளது. கடந்த, 1976ம் ஆண்டு துவக்கப்பட்ட, இது 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.ஒன்று முதல் 60 ஆண்டு வயது வரை ஆன, 101 முதலைகள், 10 தொட்டிகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.இயற்கை சூழலில், தொட்டியில் வைத்து வளர்க்கப்பட்டு வரும், இப்பண்ணையை பார்வையிட, ஆண்டுக்கு ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.கடந்த, 20 ஆண்டுக்கு முன்பு, பண்ணையில், நுாற்றுக்கணக்கான முதலைகள் இருந்த நிலையில், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக, பிடிக்கப்பட்டு, அமராவதி அணையின், கூட்டாறு வனப்பகுதியில் விடப்பட்டது. தற்போது, பெரும்பாலான தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் வீணாக உள்ளன.முதலைகளுக்கு இறைச்சி, மீன் உணவு மற்றும் பராமரிப்புக்கு, ஆண்டுக்கு, 25 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டு வருகிறது. முதலைப்பண்ணையை சுற்றுலா தலமாக அறிவித்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.முதலைப்பண்ணையை விரிவுபடுத்த வேண்டும்; வீணாக உள்ள தொட்டிகளையும் புதுப்பித்து கூடுதலாக முதலைகள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.சுற்றுலா பயணிகள் முதலைகளை பார்க்கும் பகுதியிலுள்ள, சுற்றுச்சுவர், தடுப்புச்சுவர் மற்றும் கம்பி வலைகளை புதுப்பிக்க வேண்டும். முதலைகள் குறித்த, தகவல்கள் இடம் பெற்றுள்ள அறிவிப்பு பலகைகளுடன், நவீன வசதிகளுடன் கூடிய பண்ணையாக மாற்ற வேண்டும். சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள், பூங்கா மற்றும் கழிப்பிடம், குடிநீர் என அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி, சுற்றுலா மையமாக அமராவதி முதலைப்பண்ணையை தரம் உயர்த்த வேண்டும்.வனத்துறையினர் கூறுகையில், 'முதலைப்பண்ணையை புதுப்பிக்க, விரிவான திட்ட வடிவமைப்பு, மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நிதி ஒதுக்கீடு கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. நிதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X