'சிசிடிவி' பழுதுபார்த்தல் பயிற்சி கனரா வங்கி மையம் அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சிசிடிவி' பழுதுபார்த்தல் பயிற்சி கனரா வங்கி மையம் அழைப்பு

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:இலவச 'சிசிடிவி' கேமரா பழுதுபார்த்தல் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் என, கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், அனுப்பர்பாளையத்தில் இயங்கி வருகிறது. தொழில் முனைவோர்களுக்கு, இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, 'சிசிடிவி' கேமரா பழுதுபார்த்தல் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.எழுத படிக்க தெரிந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம், 13 முழு நாட்கள் நடக்கும் இலவச பயிற்சிக்கு வருவோருக்கு, மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.பயிற்சிக்கு விண்ணப்பிக்க, அனுப்பர்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள, 'கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்துக்கு நேரில் அணுகலாம்.விவரங்களுக்கு, 99525 18441, 86105 33436 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, பயிற்சி நிலைய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X