பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி : கூடுதலாக 18 ஆயிரம் ச.மீ., நிலம் எடுக்க திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி : கூடுதலாக 18 ஆயிரம் ச.மீ., நிலம் எடுக்க திட்டம்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

உடுமலை:பொள்ளாச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு, கூடுதலாக, 18 ஆயிரம் சதுர மீட்டர் நிலம் எடுக்கப்பட உள்ளது.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்., 209), 160 கி.மீ., நீளம் உள்ள ரோடு, ஆறு மற்றும் நான்கு வழிச்சாலையாக, 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மாற்றப்படுகிறது.திண்டுக்கல்- ஒட்டன்சத்திரம் வரை, 350 எக்டர் நிலமும், ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் வரை, 287 எக்டர் நிலமும், மடத்துக்குளம்- பொள்ளாச்சி வரை, 323 எக்டர் நிலமும், இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்படுகிறது.இதற்காக நிலங்கள் சர்வே செய்யப்பட்டு, நில உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நில உரிமையாளர்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.நிலம், கட்டடங்கள், மரங்களுக்கான இழப்பீடு தொகை நிர்ணயிக்க, நிலம் எடுப்பு துறை சார்பில், கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், நிலத்திற்கான மதிப்பு நிர்ணயிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பொள்ளாச்சி பகுதிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) ரமேஷ் தலைமையில், வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர், கள ஆய்வு செய்து வருகின்றனர். நிலம் எடுப்புக்கு பல இடங்களில் விவசாயிகள், பொது மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகள்ஆலோசனை கூட்டம் நடத்தி அதிக மதிப்பீடுவழங்க உறுதியளித்துள்ளனர்.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில், பிரதான ரோடுகள் இணையும் பகுதிகளில், கூடுதலாக வளைவு ரோடுகள் மற்றும் மாநில, மாவட்ட ரோடுகளின் போக்குவரத்து பாதிக்காமல், மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன.இதற்காக, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, ஏ.கே.,புத்துார், மைவாடி, வேடபட்டி மற்றும் உடுமலை தாலுகாவிலுள்ள, குறுஞ்சேரி, பெரியகோட்டை, சின்னவீரம்பட்டி கிராமங்களில், கூடுதலாக, அரசு மற்றும் தனியார், 60 பேரிடமிருந்து, 18 ஆயிரத்து 3 சதுர மீட்டர் நிலம் எடுக்கப்படுகிறது.அதிகாரிகள் கூறுகையில்,'தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிக்கு ஏற்கெனவே எடுக்கப்பட உள்ள நிலங்களின் உரிமையாளர்களுக்கு, இழப்பீடு தொகை வழங்க, கள ஆய்வு பணி நடந்து வருகிறது. கூடுதலாக தேவைப்படும் நிலங்களும் அடையாளம் காணப்பட்டு, சர்வே பணி முடிந்துள்ளது. அவர்களிடம் கருத்து கேட்டு, இழப்பீடு நிர்ணயிக்கப்படும். இரு மாதத்தில் நிலம் எடுப்பு பணி நிறைவு பெற்று, ரோடு அமைக்கும் பணி துவங்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X