'துள்ளிக் குதித்த புள்ளிமான்கள்... ஆட்டம் போட்ட வண்ணமயில்கள்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'துள்ளிக் குதித்த புள்ளிமான்கள்... ஆட்டம் போட்ட வண்ணமயில்கள்'

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

தேனி:தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியில் நடந்த கலாசங்க விழாவில் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடனும், அறிவுக்கூர்மையுடனும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, பரிசுகளை அள்ளி சென்றனர்.இக்கல்லுாரியில் 1998 முதல் நடத்தப்பட்டுவரும் இவ்விழாவில் பராம்பரியம் அல்லாத நடனம், பழைய பாடல்கள், மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், நாடகம், வினாடி- வினா, புராண கதைகளில் சிலையாக நின்று காட்சிப்படுத்துதல் உள்ளிட்ட 10 மேடை போட்டிகள், தமிழ், ஆங்கில கட்டுரை, கவிதை, அஞ்சல் அட்டை கதை, ஆங்கில குறுங்கதை, பேச்சு போட்டி, ஓவியம், சோப்பில் சிலை, மெகந்தி, புகைப்படகலை உள்ளிட்ட 30 மேடையல்லாத போட்டிகள் நடக்கும். மாணவிகள் 8 குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 300 பேர் இருப்பர்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஒரு பேராசிரியர், அவருக்கு கீழே மாணவிகளை வழிநடந்த 10 பேராசிரியர்கள் உள்ளனர். கலாசங்கமி நிகழ்ச்சி அறிவிக்கப்படும் ஒரு மாதத்திற்கு முன்பே ஆர்வத்துடன் போட்டிகளுக்கு தயாராகின்றனர். கடந்த வாரத்தில் கலாசங்கமியின் நிறைவு விழா நடந்தது. இதில் டைமண்ட் அணி முதலிடம், டோபாஸ் அணி 2ம் இடம், ரூபி அணி 3ம் பெற்றன.-எஸ்.பவித்ரா, பி.எஸ்சி., இயற்பியல் 2ம் ஆண்டு

மகிழ்ச்சி

எங்கள் குழுவை சேர்ந்த 8 பேர் மேற்கத்திய நடனம் ஆடினோம். நான் பள்ளி காலங்களில் சிறிய மேடைகளில் ஆடிய அனுபவம் உள்ளது. இதுபோன்ற ஒட்டுமொத்த கல்லுாரி மாணவிகள் முன் பெரிய மேடையிலும் ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்நிகழ்ச்சியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு மாதமாக பயிற்சி எடுத்தோம். அதற்கான முடிவும் வெற்றியாக கிட்டியுள்ளது. ஆடல் பாடல் என கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், நடனத்தின் மூலம் நல்ல கருத்தையும் பார்வையாளர்களுக்கு புரியவைத்தோம்.-எம்.அபிநயா, பி.எஸ்சி., ஐ.டி., முதலாமாண்டுவலிமை

'ராகிங் ' கலாச்சாரம் இருந்த காலத்தை கடந்து, எங்கள் குழுவில் உள்ள சீனியர் மாணவிகள் வாய்ப்பும், பயிற்சியும் அளித்து ஊக்குவிக்கின்றனர். நடனம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது உடல் வலிமையை அதிகரிக்கும் உடற்பயிற்சியாகவும் இருக்கிறது. பேராசிரியர்கள் படித்து மதிப்பெண்கள் பெற வைப்பதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் எங்களின் திறமைகளை அறிந்து போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது,

-உறவு வலுப்பெறும்டி.கிருஷ்ணவேணி, ஒருங்கிணைப்பாளர்

நானும் இக்கல்லுாரியின் மாணவியாக இருந்துள்ளேன். அவர்களின் திறமையை உலகறிய செய்ய ஆசிரியர்கள் எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை இப்போது தான் புரிந்து கொள்ள முடிகிறது. வகுப்பு பாடங்களை எடுப்பது, தேர்வுகள் நடத்துவது ஒருபுறம் இருந்தாலும், இந்நிகழ்ச்சிகாக முதல்வர், பேராசிரியைகள் ஒரு மாதத்திற்கு முன்பே தயாராக வேண்டும். அப்போது தான் விழாவை சிறப்பாக நடத்த முடியும். இதன் மூலம் மாணவிகள், ஆசிரியைகளின் உறவும் வலுப்பெறுகிறது,

-இ.கவுசல்யா, எம்.காம்., சி.ஏ., முதலாமாண்டு

நட்புசிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் அதிகமாக இருந்தது. பள்ளி அளவிலான நடன போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்நிகழ்ச்சி பிரமாண்டமான அனுபவத்தை கொடுக்கிறது. விளையாட்டு, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட அனைத்தையும் வெளிப்படுத்த மாணவிகளுக்கு முக்கிய களமாக இது உள்ளது. துறை வாரியாக போட்டிகள் நடந்தால், மாணவிகளிடையே போட்டி மனபான்மை ஏற்படும். ஆனால் கல்லுாரியில் உள்ள அனைத்து துறை மாணவிகள் குழுக்களில் கலந்திருப்பதால், நட்புறவு அதிகரிக்கிறது,


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X