புதரில் மறையும் மயானத்தால் அச்சம்: சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதரில் மறையும் மயானத்தால் அச்சம்: சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 புதரில் மறையும் மயானத்தால் அச்சம்: சுத்தப்படுத்தி பராமரிக்க கோரிக்கை

வால்பாறை:புதருக்குள் மறைந்து கிடக்கும் மயானத்தை சுத்தப்படுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில் அரசு மருத்துவமனைக்கு பின் பக்கம், இந்துக்கள் மயானம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக மயானம் பராமரிப்பு இல்லாததால், புதர் மண்டிக்கிடக்கிறது.இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். சில நேரங்களில் புதரில் சிறுத்தை பதுங்குவதால், இறந்தவரின் உடலை புதைக்க முடியாமல் மக்கள் அச்சமடைகின்றனர்.மயானத்தில், நகராட்சி சார்பில் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பிடம் தண்ணீர் இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. மயான புதரில், பகல் நேரத்தில் பதுங்கும் சிறுத்தை, இரவு நேரத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து விடுகிறது. இதனால் இங்குள்ள உள்நோயாளிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகராட்சியில் மக்களின் அடிப்படை தேவைகள் எதுவும் பூர்த்தி செய்யப்படுவதில்லை. மயானத்தை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது.இந்துக்கள் மயானத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும். இங்குள்ள மயான கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.வால்பாறை நகரப் பகுதியில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும், எஸ்டேட் பகுதியில், 50 ஆயிரம் பேரும் வசிக்கும் நிலையில், ரொட்டிக்கடை பாறைமேட்டில் நகராட்சி சார்பில் மின் மயானம் அமைக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X