பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வால்பாறை:சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மக்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளில் நிலவேம்பு கஷாயமும் வழங்கப்படுகிறது. வால்பாறையில் உள்ள பல்வேறு தனியார் எஸ்டேட் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.வால்பாறை நகராட்சி சார்பில் டெங்கு, மலேரியா, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.வால்பாறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஜான்சன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சியில், குடியிருப்பு பகுதியை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X