மகளிர் குழுக்களுக்கு, ரூ. 4,250 கோடி கடனுதவி: இந்தியன் வங்கி பொதுமேலாளர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் குழுக்களுக்கு, ரூ. 4,250 கோடி கடனுதவி: இந்தியன் வங்கி பொதுமேலாளர் தகவல்

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மகளிர் குழுக்களுக்கு, ரூ. 4,250 கோடி கடனுதவி: இந்தியன் வங்கி பொதுமேலாளர் தகவல்

வால்பாறை:இந்தியன் வங்கி சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 4,250 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக, பொதுமேலளார் தெரிவித்தார்.வால்பாறை காருண்யா சோசியல் சென்டர் கட்டுப்பாட்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. குழுக்களுக்கு வங்கி மூலம் பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்படுகிறது.வால்பாறை இந்தியன் வங்கி கிளை சார்பில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, காருண்யா சோசியல் சென்டரில் நடந்தது. அவ்வமைப்பின் இயக்குனர் அனிதாமேத்யூ வரவேற்றார். வங்கி மண்டல மேலாளர் ராமகிருஷ்ணன், முதன்மை மேலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியன் வங்கியின் பொதுமேலளார் (சென்னை) தேவராஜ் பேசியதாவது:மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, இந்தியன் வங்கி தான் அதிக அளவில் கடன் வழங்கியுள்ளது. இந்திய அளவில், 4,250 கோடி ரூபாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மட்டும், மூவாயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவினர் குறிப்பிட்ட நாளில், வங்கியில் வாங்கிய கடன் தொகையை முறையாக செலுத்துகின்றனர். வால்பாறை மலைப்பகுதியில் மட்டும் ஏழை, எளிய பெண்கள் பயன்பெரும் வகையில், 10 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக, 1.30 கோடி ரூபாய் கடனாக வழங்கப்படுகிறது.வங்கியில் கடன் பெறும் பெண்கள், பணத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அதே போல் நகர் புறத்தில் வீடு கட்ட மத்திய அரசின் திட்டத்தின் கீழ், 15 லட்சம் ரூபாய் வரை மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு, பேசினார்.வால்பாறை வங்கி கிளை மேலாளர் யுவராஜ் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X