பயனற்ற உபகரணங்கள் வீணாகிறது அரசு நிதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயனற்ற உபகரணங்கள் வீணாகிறது அரசு நிதி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 பயனற்ற உபகரணங்கள் வீணாகிறது அரசு நிதி

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், குழந்தைகள் விளையாட அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள், பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக உள்ளது.ஊராட்சிகளில் குழந்தைகள் விளையாடுவதற்காக, அரசு சார்பில் ஊஞ்சல், சறுக்கு, சீசா உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகிறது.இத்திட்டத்தில், ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, பெத்தநாயக்கனுார், தென்சங்கம்பாளையம், கரியாஞ்செட்டிபாளையம், தாத்துார் உள்ளிட்ட ஊராட்சிகளில் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், ஊராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் உள்ளதால், விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து குழந்தைகள் விளையாட முடியாத நிலையில் உள்ளன.இரவு நேரங்களில், மர்ம நபர்கள் விளையாட்டு உபகரணங்களை திருடிச் செல்கின்றனர். இதனால், பல லட்சம் ரூபாய் அரசு நிதி வீணாகிறது.ஊராட்சி நிர்வாகங்கள் விளையாட்டு உபகரணங்களை முறையாக பராமரித்து, விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்தினால் குழந்தைகளும் பயன்படுத்துவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X