மானாவாரியில் பயிர் சுழற்சி முறை:'அட்மா' திட்டத்தில் பயிற்சி: தெற்கு வட்டார 'அட்மா' திட்டத்தில் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரியில் பயிர் சுழற்சி முறை:'அட்மா' திட்டத்தில் பயிற்சி: தெற்கு வட்டார 'அட்மா' திட்டத்தில் பயிற்சி

Added : டிச 09, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வட்டார, 'அட்மா' திட்டத்தில், மானாவாரி வேளாண்மை தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது.பயிற்சிக்கு, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நர்கீஸ் தலைமை வகித்தார். துணை இயக்குனர் சித்ராதேவி முன்னிலை வகித்தார். 'அட்மா' வட்டார மேலாளர் மேகலாதேவி வரவேற்றார்.வேளாண் உதவி இயக்குனர், பயிர் காப்பீடு செய்வதன் முக்கியத்துவம், கோடை உழவு மற்றும் வயல் சுத்தம் குறித்து விளக்கினார். விவசாயிகள், வழக்கமான சாகுபடியுடன், அசோலா வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் மண்புழு வளர்ப்பில் ஈடுபட்டு பயனடையுமாறு விவசாயிகளை அறிவுறுத்தினார். ஓய்வு பெற்ற விதைச்சான்று துறை அதிகாரி இளங்கோவன் பேசுகையில், ''மானாவாரியில் சோளம், நிலக்கடலை, ராகி, கம்பு, திணை மற்றும் கொண்டைக்கடலை அதிகம் பயிரிடப்படுகிறது. வடக்கு ஒன்றிய பகுதியில் சோளம் சாகுபடி அதிகம் உள்ளது. பட்டம் தவறாது பயிரிடுவது, பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிப்பது பலன் தரும்.சோளம் சாகுபடியின் போது, வறட்சியை தாங்கி வளரும் கோ - 3, கோ - 4, கோ - 7 ரகங்களை தேர்வு செய்வது நல்லது.விதைப்புக்கு முன், உழவின் போது, ஒரு எக்டருக்கு, 6.5 டன் மண்புழு உரம் அல்லது, 12.5 டன் மக்கிய தொழுஉரம் இட்டால், மண் வளம் அதிகரித்து, விளைச்சல் சிறப்பாக இருக்கும். விதைக்கும் முன், விதை நேர்த்தி செய்வது அவசியம்,'' என்றார்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள் கந்தசாமி, செல்வராணி மற்றும் அட்மா உதவி மேலாளர் நாகராஜ் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X